வசூலில் கலக்கும் ஆர் ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம்.. 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சினிமாவில் காமெடி கேரக்டரில் கலக்கி வந்த ஆர் ஜே பாலாஜி தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கி, நடித்திருக்கும் வீட்ல விசேஷங்க திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கின்றனர். ஹிந்தி ரீமேக் திரைப்படமான இந்தத் திரைப்படம் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் காமெடி திரைப்படமாக வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம் தற்போது வசூலில் நல்ல லாபம் பார்த்து வருகிறது. அதன் அடிப்படையில் படம் வெளியான முதல் நாளிலேயே ஒரு கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதன் பிறகு வந்த பாஸிட்டிவ் விமர்சனங்களும் படத்தின் வசூலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

அதைத்தொடர்ந்து இப்படம் இரண்டாவது நாளிலும் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் வரை வசூலித்து முன்னேற்றத்தில் இருக்கிறது. இந்த வசூல் விடுமுறை நாளான நேற்று இன்னும் அதிகரித்துள்ளது. அதாவது இந்த திரைப்படம் நேற்று 3 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை வைத்து பார்க்கும்போது வீட்ல விஷேசங்க திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களில் இதுவரை 6 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த வசூல் இனி வரும் நாட்களிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கமல் நடிப்பில் வெளிவந்துள்ள விக்ரம் திரைப்படம் பல கோடி வசூல் சாதனை புரிந்து வருகிறது.

படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த பின்னும் இப்போதுவரை தியேட்டர்களில் அந்த படத்திற்கு கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதற்கு நடுவில் வந்திருக்கும் வீட்ல விசேஷங்க திரைப்படம் எந்த பாதிப்பும் இல்லாமல் வசூலில் லாபம் பார்த்துள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.