1500 கோடில 15 போச்சுன்னு கதறும் தயாரிப்பாளர்.. ஆர் ஜே பாலாஜியை வளர்த்து விட்டவருக்கு இப்படி ஒரு சோக கதை

Actor R J Balaji: ஆரம்பத்தில் காமெடியனாக இருந்த ஆர் ஜே பாலாஜி இப்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இப்படத்தை தயாரித்த ஐசரி கணேஷ் இதற்கு முன்பு ஆர்ஜே பாலாஜி நடித்த எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களையும் தயாரித்திருக்கிறார். அப்படி பார்த்தால் அவரை வளர்த்து விட்ட பெருமையும் இந்த தயாரிப்பாளருக்கு உண்டு.

ஆனால் இப்போது அவர் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறார். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான வருண் ஏற்கனவே கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ஐசரி கணேசுக்கு ஏற்பட்ட நஷ்டம்

இவர் ஐசரி கணேசுக்கு நெருங்கிய சொந்தம். அதனாலேயே இவரை வைத்து ஜோஷுவா இமைப்போல் காக்க படத்தை அவர் தயாரித்திருந்தார். ஆனால் அந்த படம் வெளிவந்த சுவடே தெரியாமல் தியேட்டரை விட்டு ஓடியது.

விமர்சனங்களும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. இதன் மூலம் தயாரிப்பாளருக்கு 15 கோடி வரை நஷ்டம் ஆகிவிட்டது.

இவரிடம் இருக்கும் சொத்துக்களின் மதிப்பே கிட்டத்தட்ட 1500 கோடி வரும். அதில் இந்த 15 கோடி போய்விட்டதே என ஐசரி கணேஷ் தற்போது நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கிறாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்