பொல்லாதவன் படத்தில் முதல் சாய்ஸ் பல்சர் கிடையாதாம்.. அப்போதைய ட்ரெண்டிங் பைக்குடன் இருக்கும் தனுஷ்

தமிழ் சினிமாவில் அறிமுக படமே சில இயக்குனர்களுக்கு வெற்றி கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் அதை தக்க வைத்துக் கொண்டவர்கள் கிடையாது. ஆனால் அந்த வரிசையில் இடம் பெறாமல் தனி ஒரு இயக்குனராக கலக்கி வருகிறார் வெற்றிமாறன்.

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் முதன்முதல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்ற திரைப்படம் பொல்லாதவன். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் சக்கை போடு போட்டது.

மேலும் பொல்லாதவன் படத்தில் அனைவரையும் கவரும் விஷயமாக இருந்தது பல்சர் பைக் தான். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பைக் சம்பந்தப்பட்ட காட்சிகள் இளைஞர்களை பெருமளவு கவர்ந்தது. அதன் பிறகு நிறைய பேர் பல்சர் பைக் வாங்கியதெல்லாம் வேற கதை.

ஆனால் முதல் முதலில் பொல்லாதவன் படத்தில் பல்சர் பயன்படுத்தப்படவில்லை என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. அன்றைய காலகட்டங்களில் வந்த வேகத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற அப்பாச்சி என்ற பைத்தான் முதலில் பயன்படுத்தப்பட்டது.

அதற்கான புகைப்படம் கூட சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தனுசுக்கு பல்சர் பைக் தான் கரெக்ட் என கூறி வருகின்றனர்.

தனுஷுக்கு அப்பாச்சி பைக் கொஞ்சம் கூட செட்டாகவில்லை எனவும், பல்சர் அளவுக்கு மாஸ் கொடுக்கவில்லை எனவும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பொல்லாதவன் படத்திற்கு பிறகு பல்சர் பைக்கிற்க்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய கிரேஸ் உருவானது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

polladhavan-dhanush-with-apache
polladhavan-dhanush-with-apache
- Advertisement -