கேமை மாற்ற வந்த ஹீரோ, கதி கலங்க வைத்த போஸ்டர்.. ப்ராஜெக்ட் கே-வால் பிரபாஸுக்கு வந்த சோதனை

Project K: ஆதிபுருஷ் கொடுத்த மரண அடியால் துவண்டு போயிருந்த பிரபாஸ் இப்போது ப்ராஜெக்ட் கே மூலம் புத்துணர்ச்சி பெற்று இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் உலக நாயகன் இதில் நடிக்க இருப்பது மிகப்பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் இணைந்திருப்பதும் பெரும் எதிர்பார்ப்பை கொடுத்திருந்தது. அதை அதிகரிக்கும் வகையில் பட குழு இப்போது கலிபோர்னியாவில் நடைபெறும் காமிக் கான் நிகழ்வில் வாட் இஸ் ப்ராஜெக்ட் கே என்ற நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறது.

Also read: கமலை பார்த்து சினிமாவில் சாதித்த 6 இயக்குனர்கள்.. பாலிவுட்டை மிரள விடும் லியோ லோகேஷ்

நாளை கோலாகலமாக நடைபெறும் இந்த நிகழ்வுக்காக தற்போது கமல்ஹாசன் உட்பட பட குழுவினர் அனைவரும் அமெரிக்காவுக்கு பறந்துள்ளனர். இந்நிலையில் பட குழு ஒரு போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தீபிகா படுகோனின் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது பிரபாஸின் கேரக்டர் பற்றிய போஸ்டரும் வைரலாகி வருகிறது.

அதில் பிரபாஸ் சூப்பர் ஹீரோ ஸ்டைலில் இருக்கிறார். மேலும் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ள பட குழு கேமை மாற்ற ஹீரோ உதயமாகி இருக்கிறார் என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே கமல் இதில் வில்லனாக நடிப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய நிலையில் ஹீரோவின் போஸ்டர், படம் எந்த மாதிரி இருக்கும் என்ற யோசனையை ஏற்படுத்தியுள்ளது.

Also read: வேட்டையாடு விளையாடு போல ரீ-ரிலீஸ் செய்தால் பட்டைய கிளப்பும் கமலின் 5 படங்கள்.. ஆண்டவர் அல்டிமேட்

அது மட்டும் இன்றி பிரபாஸ் மேல் ஒரு பரிதாபத்தையும் வரவழைத்துள்ளது. ஏனென்றால் வித்தியாசமான படம் என நம்பி ஆதிபுருஷில் நடித்த அவர் படு மொக்கை வாங்கி இருந்தார். அந்த காயமே ஆறாத நிலையில் தற்போது இந்த சூப்பர் ஹீரோ கேரக்டர் மூலம் அடுத்த சோதனைக்கு தயாராகி இருக்கிறார்.

பான் இந்தியா படம், உலகநாயகன் போன்ற உச்ச நட்சத்திரங்கள் என நம்பி அவர் இப்படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார். ஆனால் அதற்கான பலன் எப்படி இருக்கும் என்று தான் தெரியவில்லை. இதில் கமலின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் சற்று கதி கலங்கி தான் போயிருக்கின்றனர்.

பிரபாஸின் கேரக்டர் போஸ்டர்

project k-prabhas
project k-prabhas
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்