ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

இளையராஜாவை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள்.. வாய்ப்புகள் பறிபோனாலும் வீம்பாய் நின்ற இசைஞானி

பல வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்த இளையராஜாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். சொல்லப்போனால் 80 காலகட்ட சினிமாவில் இவருடைய பாட்டுகள்தான் எங்கு திரும்பினாலும் ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த அளவுக்கு இவர் ஒரு பிசியான இசையமைப்பாளராக இருந்தார்.

மேலும் இவர் இசையமைக்காத படங்கள் வெளிவருவது அரிதிலும் அரிது. ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு இளையராஜாவை பிரபல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தனர். அந்த வகையில் சங்கிலி முருகன், ஆர் கே செல்வமணி, ஆர் வி உதயகுமார் போன்ற பிரபலங்கள் இவரை தவிர்த்து விட்டு வேறு இசையமைப்பாளரை நாடிச் சென்றனர்.

இதற்கு முக்கிய காரணம் இளையராஜா தன்னுடைய சம்பளத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தியது தான். அவ்வளவு சம்பளத்தை கொடுக்க முடியாத தயாரிப்பாளர்கள் இவரை ஒரேடியாக ஓரங்கட்ட ஆரம்பித்தனர். இது இளையராஜாவுக்கு மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது.

இருந்தாலும் இளையராஜா தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டார். அது மட்டுமல்லாமல் சம்பளத்தையும் அவர் எக்காரணம் கொண்டும் குறைக்கவில்லை. இதனால் அவருடைய மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்தது.

மேலும் அவருக்கு கிடைக்க இருந்த பல பட வாய்ப்புகளும் தேவா உள்ளிட்ட இசையமைப்பாளர்களுக்கு செல்ல ஆரம்பித்தது. அந்த வரிசையில் சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். அந்த பாடல்கள் அனைத்தும் பயங்கர ஹிட் ஆகி தேவாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

இப்படித்தான் இளையராஜாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இருப்பினும் அவர் யாரிடமும் வாய்ப்பு கேட்காமல் வீம்பாக இருந்தார். அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வந்தாலும் ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் வரவால் திரையுலகில் அவர் சிறு பின்னடைவை சந்திக்க ஆரம்பித்தார்.

- Advertisement -

Trending News