விஜய், அஜித், சூர்யாவுக்கு போட்டியாக உருவாக்குவேன்.. சிம்புவுக்கு வாக்கு கொடுத்த தயாரிப்பாளர்

சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளிவர இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதை அடுத்து சிம்பு எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது அதிகமாக இருக்கிறது.

அந்த வகையில் அடுத்ததாக அவர் நடிக்க இருக்கும் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கப் போகும் இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட இருக்கிறதாம். இதுவரை சிம்பு நடித்த படங்களிலேயே இதுதான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. ராஜ்கமல் நிறுவனம் சிம்புவுக்காக எதற்காக இப்படி மெனக்கெட வேண்டும் என்று பலருக்கும் தோன்றலாம்.

Also read: பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்த கௌதம் மேனன்.. காப்பாற்றிவிட்ட விஜய் பட தயாரிப்பாளர்

அங்குதான் முக்கிய விஷயமே இருக்கிறது. அதாவது கமல் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது சில காரணங்களால் பாதியிலேயே விலகினார். அப்போது அவருக்கு பதிலாக சிம்பு தான் நிகழ்ச்சியை நடத்தி முடித்தார். இது ஒரு வகையில் கமலுக்காக அவர் செய்த பெரும் உதவி தான்.

இதனால் கமலின் வலது கையாக செயல்படும் மகேந்திரன் சிம்பு குறித்து பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். அதற்கான கைமாறாகவே அவருக்காக ஒரு படத்தை தயாரிக்கலாம் என்ற யோசனையையும் மகேந்திரன் கூறி இருக்கிறார். இப்படித்தான் இந்த கூட்டணி உருவாகி இருக்கிறது. மேலும் அவர் சிம்புவிடம் ஒரு வாக்குறுதியையும் கொடுத்திருக்கிறார்.

Also read: அஜித் கழட்டிவிட்ட இயக்குனருக்கு தோள் கொடுக்கும் கமல்.. இவரை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படமா.?

அதாவது இந்த படத்தின் மூலம் உங்களை நான் விஜய், அஜித், சூர்யா போன்ற அளவுக்கு பெரிய ஆளாக கொண்டு வருவேன் என்று கூறியிருக்கிறார். இதை கேட்ட சிம்புவும் பெரும் மகிழ்ச்சி அடைந்து இந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இதற்காக அவருக்கு ஒரு பெரும் தொகையும் சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே ராஜ்கமல் நிறுவனத்திற்காக சூர்யா விக்ரம் திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்தார். ஆனால் கமலையே ஓரம் கட்டும் அளவுக்கு அந்த கேரக்டரால் அவர் பெரும் புகழை பெற்றார். தற்போது அவர் எந்த பொது இடத்திற்கு சென்றாலும் ரோலக்ஸ் என்ற வார்த்தை தான் தாரக மந்திரமாக ஒலித்து வருகிறது. இதையெல்லாம் யோசித்து தான் சிம்பு இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இதுதான் தற்போது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also read: கமல் ஹீரோயிசம் காட்டாத 6 படங்கள் .. உண்மையிலே இவர் பைத்தியமா என யோசிக்க வைத்த மூன்று படங்கள்

Next Story

- Advertisement -