கமல் நினைத்திருந்தால் டி-நகரையே வளைத்துப் போட முடியும்.. பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட சீக்ரெட்

kamal-cinemapettai
kamal-cinemapettai

1960ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய உலகநாயகன் கமலஹாசன் தற்போது நடிப்பது மட்டுமல்லாமல் இசை, தயாரிப்பு, இயக்கம் என பல்வேறு முறையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்,

தற்போது கமலஹாசனின் ‘விக்ரம்’ என்ற படம் தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. சினிமா துறையில் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஆர்வம் கொண்டுள்ள உலகநாயகன் கமலஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியின் தொடங்கி அதன்மூலம் சமூகப் பணியை ஆற்ற முடிவு செய்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தயாரிப்பாளரும் திரையரங்கு உரிமையாளருமான கருப்பையா, சினிமா நடிகர் நடிகைகள் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகின்றனர் என்று சொன்னார். ஆனால் கமலஹாசன் மட்டும் தயாரிப்பாளர்களை நம்பி இருப்பதில்லை.

ஏனென்றால் அவரே படங்களை தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். 6 வயது முதல் 60 வயது வரை சினிமாவில் இருக்கும் கமலஹாசன் திரைத்துறையில் கொண்ட ஈடுபாட்டினால், தான் சம்பாதித்த பணத்தையும் சினிமாவில் போட்டு ரசிகர்களுக்கு பிடித்தமான படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அவர் நினைத்திருந்தால் மற்ற நடிகரை போல் சம்பாதித்த பணத்தை வேறு விதத்தில் முதலீடு செய்யலாம். அத்துடன் கமலஹாசன் சென்னையில் உள்ள டி-நகரையே விலைக்கு வாங்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் சொந்தமாக படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார் என்று தயாரிப்பாளரான கண்ணப்பன் ஓப்பனாக பேசி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

மேலும் திரையரங்கு உரிமையாளருமான கண்ணப்பன் கடந்த சில காலங்களாகவே திரைப்படங்களை குறித்தும், நடிகர் நடிகைகளை குறித்தும் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்.

Advertisement Amazon Prime Banner