சம்பளம் போக பல லட்சம் நஷ்டத்தை ஏற்படுத்தும் நயன்தாரா.. மேடையில் கொந்தளித்த தயாரிப்பாளர்

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. தமிழ் திரையுலகில் ஹீரோவுக்கு இணையாக அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை என்ற பெருமைக்குரியவர்.

நயன்தாரா, பெரிய நடிகர் மற்றும் மெகா பட்ஜெட் போன்ற படங்களை தேர்வு செய்து அதற்கு ஏற்ப தனது சம்பளத்தை நிர்ணயித்து வருகிறார். மேலும் இவர் சமீப காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்து வருகிறார்.

இவர் ஒரு படத்திற்கு 4 முதல் 5 கோடி வரை சம்பளம் பெறுகிறார். அதிலும் சோலோ ஹீரோயின் என்றால் சற்று அதிகமாக வாங்குவார். இதுதவிர நயன்தாரா படப்பிடிப்பு தளத்திற்கு வரும் போது தனி செலவுகள் வேறு.

அதாவது நயன்தாராவின் உதவியாளருக்கு ஒரு நாள் சம்பளம் இரண்டு லட்ச ரூபாய். இது தவிர அவருடைய பாடி கார்டு, ஹேர்டிரசேர், தனி கேரவன் என்று ஒரு நாளைக்கு 12 லட்ச ரூபாய் தயாரிப்பாளர் செலவு செய்கிறார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் ராஜன் மிகவும் கோபமாக கருத்து தெரிவித்துள்ளார். ஒரு ஹீரோயினுக்கே இவ்வளவு செலவு என்றால் ஹீரோ, மற்ற நடிகர்கள் சம்பளம் மற்றும் பட வெளியீட்டு செலவு என்று தயாரிப்பாளருக்கு அதிக செலவு இருக்கும். இதை எப்படி ஒரு தயாரிப்பாளர் சமாளித்து லாபத்தை ஈட்டுவார் என்று காட்டமாக கூறியுள்ளார்.

நயன்தாராவின் சில படங்கள் விமர்சன ரீதியாக மக்களிடையே வரவேற்பை பெற்றாலும், வியாபார ரீதியாக வெற்றி பெறுவது இல்லை. இதுபோன்ற தேவையில்லாத செலவுகளை அவர் குறைத்துக்கொண்டால் தமிழ் சினிமாவில் இன்னும் சில காலம் லேடி சூப்பர் ஸ்டார் இமேஜை தக்க வைத்துக் கொள்ளலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்