முடிவுக்கு வருகிறது இந்தியாவின் மிடில் ஆடர்.. கிளம்புங்கள் ஆணியே புடுங்க வேண்டாம்

சமீப காலமாக இந்திய டெஸ்ட் அணியில் நிலவிவரும் பெரிய பிரச்சனை மிடில் ஆர்டர் தான். முதலாவதாக இறங்கியவர்கள் நன்றாக விளையாடினாலும் நடு வரிசையில் இறங்கும் வீரர்கள் சொதப்பி போட்டியை மாற்றுகின்றனர்.

மிடில் ஆர்டர் வீரர்கள் சரியாக விளையாடாததால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை, நியூசிலாந்து அணியிடம் இழந்தோம் என்று வெளிப்படையாக கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

இப்பொழுதும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக இருப்பது மிடில் ஆர்டர் தான். மிடில் ஆர்டரில் விளையாடுவது அனுபவம் வாய்ந்த ரஹானே, புஜாரா மற்றும் ரிஷப் பண்ட்.

இந்த மூவரும் போட்டியை எப்படி சொதப்ப முடியுமோ அந்த அளவிற்கு சொதப்பி வருவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைகிறது. இவர்களுக்கு போதுமான அளவு வாய்ப்பு கொடுத்தாச்சு, இனிமேலும் இவர்கள் திறமையை நிரூபிக்க வில்லை என்றால் மிடில் ஆர்டர் மாற்றப்படும் என்ற செய்தி இப்பொழுது வெளியாகியுள்ளது.

Rahanae-Pant-
Rahanae-Pant-

சட்டீஸ்வர் புஜாரா சில போட்டிகளில் தனது திறமையை நிரூபித்தாலும், தொடர்ந்து ரஹானே மற்றும் ரிஷப் பந்த் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால் இந்திய அணியில் இருந்து வெகு விரைவில் இவர்கள் இருவரும் கழற்றி விடப்படுவார்கள் என கேப்டன் கோலி தெரிவித்துவிட்டார்.

ஆகையால் தற்போது நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் இவர்களுக்கு கடைசி தொடராக அமையும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இனிவரும் போட்டிகளில் இவர்கள் இல்லையென்றால் அந்த நடுவரிசையில் விளையாடுவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.