வந்த வேகத்திலேயே கோடியில் புரளும் பிரியங்கா மோகன்.. பிரமிக்க வைக்கும் சொத்து மதிப்பு

Priyanka Mohan property value: பிரியங்கா மோகன் அவருடைய படிப்பை முடித்ததும் மாடலிங்கில் ஆர்வம் காட்டினார். அப்பொழுது இவருக்கு கன்னடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன்பிறகு தெலுங்கு சினிமாவிலும் இவருடைய முத்திரையை பதித்தார். தெலுங்கில் இவர் நடித்த முதல் படமே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அங்கே ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கான ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டார். அத்துடன் டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான் போன்ற படங்களில் நடித்து தவிர்க்க முடியாத ஹீரோயின் ஆக மாறிவிட்டார். அத்துடன் தனுசுக்கும் ஜோடியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்து இவருடைய நடிப்புக்கான பாராட்டுகளையும் பெற்று விட்டார்.

இதனை தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் OG படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல தமிழில் ஜெயம் ரவியின் பிரதர் படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படி தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் என்று சொல்லும் அளவிற்கு லக்கி ஹீரோயின் ஆகவும் பெயர் வாங்கி விட்டார்.

Also read: தமிழ் சினிமாவின் பஞ்சத்தை போக்கிய 6 நடிகைகள்.. ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய பிரியங்கா மோகன்

அப்படிப்பட்டவர் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாகிவிட்டார். இதனால் இவருடைய மார்க்கெட் ரேட்டும் அதிகமாகிவிட்டது. தற்போது இவர் நடிக்கும் படங்களில் சம்பளமாக 2கோடிக்கும் மேல் வேண்டுமென்று டிமாண்ட் பண்ணி விட்டார். அத்துடன் இவருடைய சொத்து மதிப்பும் பிரமிக்க வைக்கும் அளவிற்கு கிட்டத்தட்ட 20 கோடி அளவிற்கு உயர்ந்து விட்டது.

மேலும் சென்னையில் சில இடங்களில் சொந்த வீடும், அதேபோல் பெங்களூரிலும் சொந்த வீடு மற்றும் பல இடங்களுக்கும் சொந்தக்காரியாக இருக்கிறார். இதை தவிர இவரிடம் 2கார் இருக்கிறது. இப்படி கோடியில் புரளும் இவர் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பிஸியாகி விட்டதால் இன்னும் அடுத்தடுத்த படங்களில் இவருடைய சம்பளத்தை அதிகரிக்கலாம் என்று ஒரு முடிவில் இருக்கிறார்.

Also read: அவர் தான் என்னுடைய வெல் விஷர்.. அதிர்ச்சி அளித்த மெழுகு டால் பிரியங்கா மோகன்