அக்கா சென்டிமென்டில் பிரியங்காவை அழவைத்த பிக்பாஸ் பிரபலம்.. 1.5 மில்லியனை தாண்டிய வீடியோ

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான விஜே அபிஷேக் நேற்று சென்டிமென்டாக பேசி பிரியங்காவை அழ வைத்துள்ளார். சனிக்கிழமையான நேற்று நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களிடம் கலந்துரையாடினார்.

இந்த வாரம் பிக்பாஸ்-ன் கதை சொல்லும் டாஸ்க்கில் பேசாத சிலரை இப்பொழுது பேசுமாறு கூறினார். அப்பொழுது பேசவந்த விஜே அபிஷேக் தொகுப்பாளினி பிரியங்கா எனக்கு அக்கா மாதிரி என்று கூறி கண் கலங்கினார்.

இதைக்கண்ட பிரியங்கா அதிர்ந்து, ஏண்டா அழுவுற என்று கேட்டு அவரை அணைத்துக் கொள்கிறார். மேலும் கூறிய அபிஷேக் எனக்கு என் அக்கா தான் எல்லாமே அவரை அம்மான்னு  தான் சொல்லுவேன்.

என் அக்கா திருமணமாகி போனதை  என்னால் ஏத்துக்க முடியல, இப்போ பிரியங்காவ  பார்க்கும்போது எனக்கு எங்க அக்கா மாதிரி தோணுது என்று சென்டிமென்டாக பேசியுள்ளார்.

இன்று வெளியான இந்த ப்ரோமோ காட்சி 1.5 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி வைரலாகியுள்ளது. அபிஷேக்கை எலிமினேட் செய்ய வேண்டும் என்று கூறி வரும் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து யப்பா!!! இது உலக மகா நடிப்புடா சாமி என்று கலாய்த்து வருகின்றனர்.

இந்த வாரம் முழுவதும் வீட்டில் அபிஷேக் நடந்துகொள்ளும் முறை கொஞ்சம் ஓவராகவே இருந்து வந்தது அதிலும் இந்த பெர்பார்மன்ஸ் தான் ஹைலைட்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்