என் கணவர் தண்ணீருக்குள் இருக்கும் மீன் போன்றவர்- அதிக வயது வித்யாசத்தை பற்றி பேசிய பிரியங்கா சோப்ரா

இரண்டாயிரத்தில் இந்திய உலக அழகியாக முடிசூடிய பிரியங்கா சோப்ரா, முதல் முதலாக சினிமாவிற்கு அறிமுகமானது தளபதி விஜயுடன் நடித்த ‘தமிழன்’ படத்தில் தான். அதன்பிறகு தற்போது இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கொடி கட்டிப் பறக்கிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு நீண்ட நாட்களாக காதலித்த அமெரிக்க பாப் இசைப் பாடகர் நிக் ஜோனஸ்-சை திருமணம் செய்து கொண்டார்.

எனவே திருமணமாகிய இரண்டு வருடங்களில் 38 வயதான பிரியங்கா தனக்கும், 28 வயதான நிக்கிற்கும் இடையேயான 10வயது இடைவெளியை பற்றி தற்போது ரகசியம் திறந்துள்ளார்.

தற்சமயம் லண்டனில் இருக்கும் பிரியங்கா ‘டெக்ஸ்ட் ஃபார் யூ’ படப்பிடிப்பை முடித்த நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ப்ரியங்கா சோப்ரா,

‘நிக் தண்ணீருக்குள் இருக்கும் மீன் போல’ இந்திய கலாச்சாரத்தை பிடித்து கொண்டவராக உள்ளார் என்றும், தங்களுக்கு இடையே உள்ள வயது வித்தியாசம் குடும்ப வாழ்க்கைக்கு தடையாக இல்லை என்றும்,

priyanka-chopra-cinemapettai

தங்களுடைய உறவு கடினமானதாக இல்லாமல், சாதாரண ஜோடி போலவே ஒரு ஒருவருக்கொருவர் தங்களுடைய பழக்க வழக்கத்தையும், விருப்பங்களையும் புரிந்து கொண்டுள்ளோம் என்று மனம் திறந்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்