நடிகைகளுக்கு நடக்கும் அவலம்.. வெளிப்படையாக கூறிய பிரியாமணி

முத்தழகு என்று சொன்னால் முதலில் எல்லோருக்கும் ஞாபகம் வருவது நடிகை பிரியாமணி தான். கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தில் நடித்த முத்தழகு கதாபாத்திரம் அவ்வளவு ஆழமாக ரசிகர்களின் மனதில் பதிந்துள்ளது. மேலும் இப்படத்திற்காக பிரியாமணி தேசிய விருதையும் பெற்றார்.

அதன் பிறகு பத்திற்கும் மேற்பட்ட படங்களில் பிரியாமணி நடித்திருந்தாலும் எந்த படத்திலும் முத்தழகு கதாபாத்திரத்துக்கு இணையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேலும் படவாய்ப்புகளும் இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.

இதனால் சிறிது காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி காதலித்தவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன்பின்பு சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

மேலும், தமிழ் திரையுலகில் சந்தித்த சவால்களையும் அதில் கூறியுள்ளார். அதாவது பாலிவுட் நடிகைகளுக்கு இயல்பாகவே உடலமைப்பு கட்டுக்கோப்பாகவும், வெள்ளையாகவும் இருக்கும். அதனால் அவர்களுக்கு கிளாமர் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.

ஆனால் தமிழ் நடிகைகளுக்கு உடல்வாகு வேறு. அதைப் புரிந்து கொள்ளாத பலர் சில நடிகைகளை வலுக்கட்டாயமாக கிளாமர் ரோலில் நடிக்க கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால் தற்போது தமிழ் சினிமா கொஞ்சம் மாறி உள்ளதாக பிரியாமணி தெரிவித்துள்ளார்.

Next Story

- Advertisement -