பிரியாமணியை நோகடித்த ரசிகர்கள்.. அதுவும் எதற்காக தெரியுமா?

தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியாமணி. இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த பிரியா மணி முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

நடிகர் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியாமணி நடித்திருப்பார். இப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த முத்தழகு எனும் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும். மேலும், இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழில் ‘கொட்டேஷன் கேங்’ என்ற படத்தில் நடித்து வரும் பிரியாமணி, பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். தற்போது தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து வரும் பிரியாமணி, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

priyamani-latest-photos
priyamani-latest-photos

அதில், “எனக்கு வயதாகிவிட்டது. கறுப்பாக இருக்கிறேன். குண்டாகி விட்டேன் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்வது மிகவும் மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கின்றது. இப்படி யாரையும் தரக்குறைவாக பேசாதீங்க. கருப்பாக இருப்பதும் அழகு தான்” என மிகவும் வேதனையுடன் கூறியிருந்தார்.

- Advertisement -