ப்ரியாமணியின் கவர்ச்சியை பார்த்து ஓகே சொன்ன பிரபல நடிகர்.. இவரு கீர்த்தி சுரேசையே பிகினி போட சொன்னவரு!

தென்னிந்திய நடிகைகளை அவர்களின் கவர்ச்சியை காட்டச் சொல்லி பெரிய நடிகர் ஒருவர் பட வாய்ப்பு தருவதாக சமீபகாலமாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுவும் சமீபத்தில் கீர்த்தி சுரேஷின் பிகினி புகைப்படத்தை கேட்டதாகவும் ஒரு பிரச்சனை எழுந்தது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியாமணி. பருத்திவீரன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தாலும் அதன் பிறகு நல்ல கதையை தேர்ந்தெடுக்காமல் கமர்சியல் நாயகியாக வலம் வர ஆசைப்பட்டு கவர்ச்சியில் குதித்தார்.

கவர்ச்சிக்கு பேர்போன தெலுங்கு சினிமா அவரைக் கொண்டுபோய் சில வருடங்கள் வைத்து படம் தயாரித்தது. அதன் பிறகு மார்க்கெட் டல் அடிக்க திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் பிரியாமணி.

தற்போது மீண்டும் அசுரன் ரீமேக் நாரப்பா, மைதானம் என்ற ஹிந்தி படம், அமேசான் தயாரித்த த ஃபேமிலி மேன் 2 போன்றவற்றில் நடித்து தற்போது விறுவிறுப்பாக தன்னுடைய செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

இதில் மைதானம் என்ற ஹிந்தி படத்தில் பிரியாமணியின் பழைய கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து ஒப்பந்தம் செய்தாராம் அஜய் தேவ்கன். போனி கபூர் தயாரித்திருக்கும் அந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பல வருடம் ஆகிறது. வருகின்ற அக்டோபர் மாதம் அந்த படம் திரைக்கு வர உள்ளது.

அஜய் தேவ்கன் ராஜமவுலி இயக்கி வரும் RRR படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹிந்தியில் ஒரு புதிய படத்தில் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய ஆசைப்பட்டு அஜய் தேவ்கான் அந்த படத்தில் அவரை நீச்சல் உடையில் பார்க்கவும் ஆசைப்பட்டாராம். கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு மட்டுமே தன்னுடைய படங்களில் வாய்ப்பு என்பதை பல வருடமாக கையாண்டு வருகிறாராம் அஜய் தேவ்கன்.

priyamani-cinemapettai-01
priyamani-cinemapettai-01
- Advertisement -