ஸ்டைலிஷ் ராகவா லாரன்ஸ், ஹோம்லி பிரியா பவானி சங்கர்.. வைரலாகும் ருத்ரன் பட புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் சென்சேஷனல் நாயகி ப்ரியா பவானி சங்கர் முதல்முறையாக ராகவா லாரன்ஸ் உடன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கின்றன.

தற்போது இளம் நடிகர்கள் முதல் முன்னணி நடிகர்கள் வரை அனைவரும் பிரியா பவானி சங்கர் உடன் ஜோடி போட்டு ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என ஏங்க வைக்கும் அளவுக்கு ரசிகர் பட்டாளம் அவருக்கு அதிகமாகிவிட்டது.

சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்து தமிழ் தெலுங்கு என தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டே வருகிறார்.

அந்தவகையில் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என அனைத்து மொழிகளிலும் மார்க்கெட் உள்ள நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ் உடன் ஜோடி பாடல் தன்னுடைய சினிமா மார்க்கெட் வேற வசதியாக இருக்கும் என சரியான நேரம் பார்த்து ருத்ரன் எனும் படத்தில் ஜோடி போட்டுள்ளார்.

ருத்ரன் பட பூஜையில் ஸ்டைலிஷ் ஆக ராகவா லாரன்ஸ் மற்றும் ஹோம்லியாக பிரியா பவானி சங்கர் இயக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன. முன்னர் இருந்ததை விட பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் கொஞ்சம் உடல் எடை கூடி பார்ப்பதற்கே மப்பும் மந்தாரமாக இருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.

priyabhavanishankar-ragavalawrance
priyabhavanishankar-ragavalawrance

ருத்ரன் படத்தை ஆடுகளம் மற்றும் பொல்லாதவன் போன்ற படங்களை தயாரித்த கதிரேசன் தயாரித்து இயக்க உள்ளார். தமிழ் சினிமாவில் அடுத்து எதிர்பார்ப்புள்ள திரைப்படங்களில் ருத்ரன் படமும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

priyabhavanishankar-ragavalawrance-01
priyabhavanishankar-ragavalawrance-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்