அட்லீயை கிண்டல் செய்தவர்களுக்கு பிரியா கொடுத்த பதிலடி.. என்னென்ன சொல்றாங்க பாருங்க!

அட்லீ சினிமாவில் எவ்வளவு வேகத்தில் உயரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறாரோ அதே அளவுக்கு நிறைய வயிற்றெரிச்சலில்களையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அனைத்திற்கும் காரணம் தளபதி விஜய் தான்.

ராஜா ராணி படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்ற மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது 30 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் இயக்குனராக மாறிவிட்டார் அட்லீ. இன்னைக்கு தேதிக்கு சங்கருக்கே அவ்வளவு தான் சம்பளம்.

அட்லீயும் ஷங்கரின் உதவி இயக்குனர் தான். அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். ஆனால் அந்த படம் ஏற்கனவே விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு திரைப்படத்தின் உல்டா தான் என இப்போதே ஒரு பக்கம் பேச ஆரம்பித்துவிட்டனர்.

அட்லீ எப்போதுமே கதை திருட்டில் மாட்டுவது வழக்கம். முன்னாடி வெற்றி பெற்ற படத்தின் கதையை சுட்டு இந்த காலத்திற்கு ஏற்றபடி திரைக்கதை அமைத்து படம் எடுத்து விடுவார் என்ற கருத்துக்கள் தான் தற்போது வரை இருந்து வருகிறது. இதுவே அனைவரும் இவரை கிண்டலடிக்க காரணமாகவும் அமைகிறது.

atlee-priya-cinemapettai
atlee-priya-cinemapettai

அதுமட்டுமில்லாமல் ஒரு பேட்டியில் 7 ராகம்தான் 7 தாளம்தான் என்று கூறியதை இப்போதுவரை வச்சு செய்து வருகின்றனர். இப்படி திரும்பிய பக்கமெல்லாம் அட்லீயை கலாய்த்ததால் கடுப்பான அட்லீயின் மனைவி பிரியா அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அட்லீயை வெறுப்பவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, முனிவர் ரேஞ்சுக்கு பிரியா, எங்கள் மீது இன்னும் அன்பு செலுத்துவதற்கு நன்றி, அன்பை பரப்புவோம் என குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -