இணையத்தை பற்ற வைத்த ப்ரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம்! கிறுகிறுத்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி, பிறகு சின்னத்திரை கதாநாயகியாக ஜொலித்து, தற்போது முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுத்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் தமிழ் மக்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் தனது அயராத உழைப்பால் ‘மேயாதமான்’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக கால்பதித்தார் ப்ரியா. அதற்குப் பிறகு கடைக்குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர் என பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல், தற்போது இவருடைய கைவசம் இந்தியன் 2, ஓமன பெண்ணே, குருதி ஆட்டம், AV33 ஆகிய படங்கள் உள்ளன.

இந்த நிலையில் ப்ரியா பவானி ஷங்கரின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீப்போல்  பரவுவதோடு, பல ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது.

அதாவது ப்ரியா பவானி சங்கர் எவ்வளவு பிஸியான நடிகையோ, அதற்கு பல மடங்கு அதிகமாக சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களையும் தன் பக்கம் கவர்வதை வழக்கமாக வைத்துள்ளார் ப்ரியா.

அந்த வகையில் தற்போது ப்ரியா அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

PriyaBhavani
PriyaBhavani

ஏனென்றால்  இந்தப் புகைப்படத்தில் பிரியா பவானி சங்கர் சிறிது கவர்ச்சி கூட இல்லாமல் பார்வையாலே ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். தற்போது ப்ரியாவின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்