முன்னணி நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர்.. இனி அம்மணியை கையிலயே பிடிக்க முடியாதே

வருங்கால நயன்தாரா என ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரியா பவானி சங்கர் அடுத்ததாக முன்னணி நடிகரின் படத்தை கைப்பற்றிய செய்தி தான் இன்றைய கோலிவுட் ட்ரெண்டிங். அதுவும் இந்த நடிகருடனா! என ஆச்சரியப்படும் அளவுக்கு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது வெற்றி நாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் பிரியா பவானி சங்கர். சீரியலில் இருக்கும்போதே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, தற்போது அதே வரவேற்பு அப்படியே சினிமாவிலும் தொடர்கிறது.

அதுமட்டுமில்லாமல் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நடிகர்களின் பெரும்பாலான படங்களில் பிரியா பவானி சங்கர் தான் நடித்து வருகிறார். ஏற்கனவே 8 படங்களில் நடித்து முடித்துவிட்டார், மேற்கொண்டு இன்னும் 10 படங்களுக்கு மேல் அட்வான்ஸ் வாங்கி வைத்துள்ளாராம்.

இந்நிலையில்தான் ப்ரியா பவானி சங்கருக்கு தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜெயம் ரவியின் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரும் நீண்ட நாட்களாகவே ஒரு முன்னணி நடிகரின் பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்.

jayamravi-priya-bhavani-shankar
jayamravi-priya-bhavani-shankar

எவ்வளவு நாள் தான் அவரும் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நடிகர்களுடன் ஜோடி போடுவது. என்னதான் இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டாலும் சம்பளம் பெரிய அளவு ஏறவில்லை. இதனால் ஜெயம் ரவியுடன் இணைந்துள்ள இந்த படத்தின் மூலம் சம்பளமும் மார்க்கெட்டும் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என பெரிதும் நம்புகிறாராம் பிரியா பவானி சங்கர்.

ஜெயம் ரவிக்கு பூலோகம் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த கல்யாண இந்த படத்தை இயக்குகிறார். ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என கோலிவுட் வட்டாரங்களில் கூறுகின்றனர்.

- Advertisement -