ப்ரியா பவானி சங்கருக்கு படவாய்ப்புகள் வருவதற்கு இதுதான் காரணமா? இந்த விஷயம் தெரியாம போச்சே!

தமிழ் சினிமாவில் பல படங்களை தன்வசப்படுத்தி வைத்திருப்பவர் பிரியா பவானி சங்கர். தற்போது மற்ற நடிகைகளை விட இவர்தான் அதிக படங்களை கையில் வைத்துள்ளார்.

சமீபகாலமாக பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதற்கு காரணம் இவருடைய எதார்த்தமான நடிப்பும் மற்ற நடிகை எல்லாம் பொறாமைப்படும் அளவிற்கு உடல் தோற்றமும் அழகாக உச்சரிக்கும் வசனமும் தான் இவரது வெற்றிக்கு காரணம்.

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் படங்களில் நடிப்பதற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர் படம் வெற்றி பெறுகிறதோ இல்லை தோல்வி அடைகிறதோ அது முக்கியமில்லை பணம் தான் முக்கியம் என பணத்தை வாங்கி விட்டு சென்று விடுவார்கள்.

priya-bhavani-shankar-1
priya-bhavani-shankar-1

ஆனால் பிரியா பவானி சங்கர் மற்ற நடிகைகளைப் போல கோடிக்கணக்கில் சம்பளம் வாங்காமல் தனக்குத் தகுந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் சம்பளமாக பெற்று வருகிறார்.

ஒரு படத்திற்கு பிரியா பவானி சங்கர் 20 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதால் தான் பல தயாரிப்பாளர்களும் பிரியா பவானி சங்கர் படத்தில் நடிக்க வைக்கமுன் வருவதாகவும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்