பிரியா பவானி சங்கரை எனக்கு பிடிச்சிருக்கு.. ஒன்னுக்கு ரெண்டு படமா அள்ளிக் கொடுக்கும் தயாரிப்பாளர்!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக மாறிக் கொண்டிருக்கிறார் பிரியா பவானி சங்கர். நடிகர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை தங்களுடைய படங்களில் பிரியா பவானி சங்கரை நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவருக்கு நடிக்க தெரியவில்லை என்றாலும் சும்மா நீங்க வந்தா மட்டும் போதும் என வாரி வாரி பட வாய்ப்புகளைக் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரே தயாரிப்பு நிறுவனத்திற்கு இரண்டு படங்களில் தொடர்ந்து நடிக்க உள்ளாராம்.

முன்னணி நடிகர் தனுஷுக்கு பொல்லாதவன், ஆடுகளம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த நிறுவனம் தான் பைவ் ஸ்டார். இந்த நிறுவனம் தற்போது மீண்டும் படத் தயாரிப்பில் களமிறங்கி ஒரே நேரத்தில் பல படங்களை தயாரித்து வருகிறது.

அதில் ஒன்று ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன். இந்த படத்தை அந்த படத்தின் தயாரிப்பாளரான பைவ் ஸ்டார் கதிரேசன் என்பவரே இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து இதே நிறுவனம் அடுத்ததாக விஷாலை வைத்து அடங்க மறு என்ற வெற்றி படத்தை கொடுத்த கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளது.

அந்தப் படத்திற்கும் பிரியா பவானி சங்கர் தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் அடம்பிடித்து எக்ஸ்ட்ரா சம்பளம் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்துவிட்டாராம். அப்படி என்ன பிரியா பவானி சங்கர் மீது அவருக்கு தனி அக்கறை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

ஆனால் பிரியா பவானி சங்கர் வட்டாரங்களில் விசாரித்தபோது, எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் சிரமமும் கொடுக்காமல் பந்தா காட்டாமல் பிரியா பவானி சங்கர் நடந்து கொள்வதால் அவருக்கு படவாய்ப்புகள் கொடுக்கின்றனர் எனவும் கூறுகின்றனர்.

priya-bhavani-shankar-cinemapettai
priya-bhavani-shankar-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்