பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்.. தொடர்ந்து கால்சீட் கேட்டு வரும் தயாரிப்பாளர்கள்

செய்தி வாசிப்பாளராக இருந்து, சின்னத்திரை நடிகையாக வளர்ந்து, தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாதமான்தமிழ் சினிமா படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

தற்போது பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் கசடதபற, குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், ஓ மணப்பெண்ணே ஆகியப் படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

இது மட்டுமின்றி பெயரிடப்படாத ஹரியின் படம், ருத்ரன், இந்தியன் 2, பத்து தல, பெயரிடப்படாத சர்ஜூன் படம் ஆகியவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பூலோகம் பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் தான் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

jayamravi-priya-bhavani-shankar
jayamravi-priya-bhavani-shankar

தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகள் ஆதிக்கம் அதிகரித்து வரும் இந்த சமயத்தில், தமிழ் பெண்ணான பிரியா பவானி சங்கரின் வளர்ச்சி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற ஒரு சில தமிழ் நடிகைகளே தங்களது இடத்தை தக்க வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -