கற்பழித்து கொலை செய்யப்பட்ட நடிகை பிரதியுஷா.. தற்கொலை என உருட்டிய பெரிய நடிகரின் குடும்பம்

தமிழில் தவசி, சவுண்டு பார்ட்டி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் பிரதியூஷா(Prathyusha). அடிப்படையில் தெலுங்கு நடிகையான இவர் தமிழில் முரளி நடித்த மனுநீதி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

பிரதியூஷா கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி காதல் பிரச்சினையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகி பரபரப்பை கிளப்பியது. பிரதியுஷா ஆந்திராவை சேர்ந்த ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், இருவரது சமூகத்தினரும் காதலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என அதோடு அவரது கதையையும் மூடி மறைத்து விட்டார்கள்.

இந்நிலையில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு பிரதியூஷாவின் தாயார் தன்னுடைய மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், அவளை கற்பழித்து கொலை செய்துவிட்டார்கள் என புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.

நீண்ட நாட்களாக தன்னுடைய மகளுக்கு தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த மூத்த நடிகர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும், அரசியல்வாதிகளின் தொல்லைகளும் அதிகமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதியூஷாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவரது உடம்பில் பல நகக்கீறல்கள் இருந்ததாகவும், மேலும் அவர்மீது விந்தணுக்கள் படர்ந்து இருந்ததாகவும் அந்த ஆதாரங்களை அப்படியே பணம் கொடுத்து மறைத்து விட்டார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.

எனக்கு கோர்ட்டுக்கு போய் வாதாடும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் இல்லை, அதேபோல் எங்கு போய் கம்ப்ளைன்ட் செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார் பிரதியூஷாவின் தாயார்.

pratyusha-cinemapettai-01
pratyusha-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்