சூப்பர் ஹிட் இயக்குனருடன் களமிறங்கும் பிரசாந்த்.. எதிர்பார்ப்பை கிளப்பிய புதிய படம்

தமிழ் சினிமாவில் வாழ்ந்து கெட்ட நடிகர்களில் ஒருவர் தான் பிரசாந்த். இன்றைக்கு இருக்கும் விஜய், அஜித் போன்றோரின் ரசிகர் பட்டாளங்களை விட அப்போதே அளவுக்கு அதிகமான ரசிகர்களை வைத்து இருந்தவரும் இவர்தான்.

காலப்போக்கில் தன்னுடைய கதை தேர்வில் சொதப்பி முன்னணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட் காலியாகி தற்போது ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார். இன்னும் எழுந்த பாடில்லை.

இருந்தாலும் ஃபீனிக்ஸ் பறவை போல் தொடர்ந்து தன்னுடைய சினிமா முயற்சியை எடுத்துக் கொண்டே இருக்கிறார் பிரசாந்த். சமீபகாலமாக பல ரீமேக் படங்களில் நடித்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.

இருந்தாலும் விடா முயற்சியாக தற்போது ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த அந்த ஆதவன் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். அந்தாதுன் படம் இந்தியில் சக்கைப்போடு போட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்தகன் படத்தின் சிறப்பாக பல வருடங்களுக்கு பிறகு பிரசாந்துடன் நடிகை சிம்ரன் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தை பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய பிரெடரிக் என்பவர் இயக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து பழைய சூப்பர் ஹிட் நடிகரான நவரச நாயகன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதனைத் தொடர்ந்து 19 வருடங்களுக்குப் பிறகு பிரசாந்த் உடன் சேர்ந்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். கடைசியாக பிரசாந்துடன் தமிழ் என்ற படத்தில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ravikumar-android
ravikumar-android
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்