கமல்ஹாசன் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க கண்டிஷன் போட்ட பிரகாஷ்ராஜ்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தான் இருக்கு!

உலகநாயகன் என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமான நடிகர்  கமல்ஹாசன் என்று கூறலாம். அந்த அளவிற்கு நடிப்பால் மற்ற நடிகர்கள் நெருங்க கூட முடியாத அளவிற்கு மிக உயரத்தில் உள்ளார்.

கமல்ஹாசன் எப்படி நடிகர்களின் வரிசையில் முன்னிலையில் உள்ளார். அதேபோல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மிகவும் முன்னிலையில் இருப்பவர் பிரகாஷ்ராஜ்.

கமல்ஹாசன் நடிப்பில் மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் கமல்ஹாசன் என் கண்ணு வேணும்னு சொன்னியாமே கொண்டுவர 5 லட்சம் சொன்னியாமே எனக் கூறும் வசனம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது .

வேட்டையாடு விளையாடு படத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பதற்கு பல கண்டிசன் போட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேட்டையாடு விளையாடு படத்தில் கமலஹாசனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் உள்ளதோ, அதே அளவிற்கு எனக்கும் படத்தில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

prakash raj kamal hassan
prakash raj kamal hassan

அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் எப்படி பல படங்களில் நடித்து வருகிறார். அதேபோலத்தான் நானும் பல படங்களில் நடித்து வருகிறேன். அதனால் கமல்ஹாசன் எப்போது சூட்டிங் ஸ்பாட் வருவாரோ, அதே நேரத்தில் தான் நானும் சூட்டிங் ஸ்பாட் வருவேன் என படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு கண்டிசன் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசனுக்குகாக பத்து நிமிஷம் கூட வெயிட் பண்ணி நடித்துக் கொடுக்க மாட்டேன், வேண்டுமென்றால் அவர் எனக்காக வெயிட்பண்ணி நடித்து கொடுக்கட்டும் என கௌதம் வாசுதேவ் மேனனிடம் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

வேட்டையாடு விளையாடு வெளிவந்த காலத்தில் இவர்கள் இருவருக்கும் அதிகமான ரசிகர்கள் இருந்தனர். அதனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு சில போட்டிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இயக்குனர்களுக்கு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்