மாயா சூழ்ச்சி வலையில் பலிகாடான பிரதீப்.. கமலின் தீர்ப்புக்கு போர் கொடி தூக்கிய பிரபலங்கள்

Vijay Tv Bigg Boss 7: ஒரு ரியாலிட்டி ஷோ கடந்த ஆறு வருஷமாக மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலுக்காக மட்டுமே. அதாவது விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் மக்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சியாக மாறியதற்கு கமலின் பேச்சும், நீதித் தவறான தீர்ப்பும் வழங்கியதால் மட்டுமே.

ஆனால் தற்போது ரெக்கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப்புக்கு சரியான தீர்ப்பு கிடைத்ததா என்பது தான் தற்போது விவாதமாக சமூக வலைதளங்களில் போய்க்கொண்டிருக்கிறது. அதாவது பிக் பாஸில் இருக்கும் போட்டியாளர்களுக்கு டஃப் போட்டியாளராக பிரதீப் மட்டுமே மக்களிடம் அதிகமான ஓட்டுக்களை வாங்கிக் கொண்டு வந்தார்.

இவருடைய அதிரடியான பேச்சும், விளையாட்டை வித்தியாசமாக கையாளும் விதமும் மக்களுக்கு பிடித்தது. அதனாலேயே கடைசி எபிசோடில் இவர் பெயர் கமலஹாசன் சொன்னதும் வெளியில் இருந்து அவர்களுடைய ஆரவாரத்தை கைதட்டல்கள் மூலம் கொடுத்தார்கள். இதை கவனித்த பிரதிப் நம்மளுக்கு வெளியில் அதிகமான ரசிகர்கள் கிடைத்து விட்டார்கள் என்று ஓவர் கான்ஃபிடன்ஸ் உடன் விளையாட்டை வேறு விதமாக ஆட ஆரம்பித்தார்.

Also read: திடீர்னு கட்டிப்புடிச்சு, முத்தம் கொடுத்துட்டார்.. புகாரில் சிக்கிய பிக் பாஸ் பெண் போட்டியாளர்

ஆனால் இந்த ஒரு விஷயமே மற்ற போட்டியாளர்கள் பிரதீப்பை காலி பண்ணுவதற்கு திட்டம் தீட்டும் வகையில் அமைந்து விட்டது. அதாவது சூனியக்காரியாக பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்து ஒவ்வொருவரையும் டார்கெட் செய்து அவர்களுடைய இமேஜை காலியாக்கி விளையாட்டை விட்டு வெளியே அனுப்புவது தான் முக்கிய குறிக்கோளாக மாயா பல வேலைகளை பார்த்து வருகிறார்.

பாவம் இது தெரியாமல் மாயா செய்த சூழ்ச்சியில் பலிகடாக பிரதீப் மாட்டிக் கொண்டார். ஆனாலும் கமல், பிரதீப்புக்கு லாஸ்ட் வார்னிங் ஒன்று கொடுத்திருக்கலாம். இந்த ஒரு அவப்பெயருடன் பிரதீப் வெளியானது, வெளியில் இருக்கும் பலருக்கும் மிகவும் அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் கமலின் தீர்ப்புக்கு எதிராக சினேகன் மற்றும் பிரதீப்பின் நண்பர் கவினும் ஆறுதலாக டுவிட்டரில் அவர்களுடைய பதிவுகளை போட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் கவின், பிரதீப் உன்னை பற்றி தெரிந்தவர்களுக்கு நீ யார் என்று புரியும் வேற எதை நினைத்தயும் நீ சோர்ந்து விடாதே என்று ஆறுதலாக கூறியிருக்கிறார். அத்துடன் கவிஞர் சினேகனும் “நீ பார்க்காத ரணங்களும் இல்லை… நீ பார்க்காத வழிகளும் இல்லை… பிரதீப்… இதுவும் கடந்து போகும். வாழ்க்கை எந்த வீட்டுக்குள்ளும் இல்லை… வெளியே கிடக்கு வா… என்று பதிவிட்டு இருக்கிறார்.

snegan-twit
snegan-twit

Also read: நியாயமில்லாத பிரதீப் எவிக்சன்.. ஆண்டவரின் லீலைகளை அவிழ்த்து விடும் நெட்டிசன்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்