ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

டபுள் ஹீரோயின் படத்தில் நடிக்கும் லவ் டுடே பிரதீப்.. சிவகார்த்திகேயன், விஜய் நடிகைகளுக்காக பிடித்த அடம்

இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே என்னும் ஒரே திரைப்படத்தின் மூலம் சினிமாவின் உச்சத்திற்கு சென்று விட்டார் என்று தான் சொல்லலாம். இவர் பாலிவுட்டில் நடிக்க இருப்பதாக கூட தகவல்கள் வெளியாகின. அதேபோன்று நடிகர் சிம்பு நடிக்க இருந்த கொரோனா குமார் திரைப்படத்திலும் தற்போது இவர் தான் ஹீரோவாக நடிக்கிறார்.

கோமாளி திரைப்படத்தின் மூலம் ஒரு நல்ல இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர்களின் அதிர்ஷ்ட நாயகனாக மாறிவிட்டார். பிரதீப்பின் அடுத்தடுத்த கால்ஷீட் எங்களிடம் தான் இருக்கிறது என்று கூட ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் ஒரு மேடையில் சொல்லி இருந்தார்.

Also Read: நாங்க கொடுக்கிற காசு, புகழ் மட்டும் வேணுமா? விஜய்யை கிழித்து தொங்கவிடும் மீடியா

கோடிகளில் லாபம் கொடுத்த பிரதீப் ரங்கநாதனுடன் பணிபுரிய தயாரிப்பாளர்களாக இருக்கட்டும், ஹீரோக்களாக இருக்கட்டும் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். தளபதி விஜய்க்கு தான் ஒரு கதை சொல்லி இருப்பதாக கூட இவர் அப்போதைய பேட்டிகளில் சொல்லியிருந்தார். ஆனால் தற்போது இவரின் அடுத்த படத்திற்கான அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதாவது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஏ ஆர் முருகதாஸின் உதவி இயக்குனராக இருந்த மிதுன் என்பவர் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். மேலும் இந்த படம் டபுள் ஹீரோயின் கதையை மையமாகக் கொண்டது. இந்தப் படத்தில் நடிக்க இருக்கும் கதாநாயகிகளை அவரே பட குழுவிடம் சிபாரிசு செய்து இருக்கிறாராம்.

Also Read:அஜித், விஜய் தியேட்டர்களில் தாலாட்டி தூங்க வைத்த 6 படங்கள்.. படு தோல்வி சந்தித்த சுறா

நடிகர் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான ஹீரோயின் ஆக தற்போது இருப்பவர் தான் பிரியங்கா அருள் மோகன். இவர் டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து சிவா உடன் இணைந்து டான் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு வேறு எந்த பட வாய்ப்புகளும் வந்த மாதிரி இல்லை. இவரை ஒரு ஹீரோயினாக இந்த படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் பிரதீப்.

மேலும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ராஸ்மிகா மந்தனா தமிழில் நேரடி அறிமுகமாக தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். ராஷ்மிகாவை தன்னுடைய டபுள் ஹீரோயின் கதையில் நடிக்க சிபாரிசு செய்து இருக்கிறார் இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இந்த இரண்டு ஹீரோயின்களையும் இவரே சிபாரிசு செய்திருப்பது சினிமா வட்டாரத்தில் தற்போது மிகப் பெரிய தகவலாக இருக்கிறது.

Also Read:விஜய், அஜித்தை வைத்து ரஜினியோட அந்தப் படத்திற்கு அடி போடும் லோகேஷ்.. மெகா பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?

- Advertisement -

Trending News