சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ரெட் கார்டை சரித்திரமாக மாற்றிய பிரதீப்.. பிக்பாஸ் அலை ஓய்ந்தும் ட்ரெண்டிங்கில் இருக்க காரணம்

Pradeep Antony : பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவுக்கு டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வந்தது. இதற்கு காரணம் அந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தான்.

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான கவின் நண்பன் மற்றும் நடிகருமான பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் 7 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக ஆடி வந்த பிரதீப்பை ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றிவிட்டார் கமல்.

அதாவது பிரதீப்பினால் பெண்களுக்கு பிக்பாஸ் வீட்டில் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக ரெட் கார்ட் கொடுத்த நிலையில் பிரதீப்புக்கு எதிராக ஒரு ஆர்மியை தொடங்கிவிட்டனர்.

அதுவும் கமலை கண்டித்து பலர் விமர்சனங்கள் வந்தது. மாயாவின் சூழ்ச்சியால் தான் பிரதீப் வெளியேறி விட்டதாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

இதனாலேயே பிரதீப் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதோடு இறுதியில் மாயாவை வெற்றி பெறச் செய்யாமல் அர்ச்சனாவுக்கு வாக்களித்ததற்கு பிரதீப் முக்கிய காரணமாக இருக்கிறார். ஏனென்றால் இவருக்கு ஆதரவாக மாயாவை ஜெயிக்க விடக்கூடாது என ரசிகர்கள் முனைப்பில் இருந்தனர்.

34 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் பிரதீப்

அதோடு இப்போது பிரதீப் புதிய படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். இன்று தனது 34 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ட்வீட் போட்டு உள்ளார். அதாவது 34 வயசு ஆச்சு திரும்பி பார்த்தா காசு தவிர எல்லாமே சம்பாதிச்சு இருக்கேன்.

எதுவுமே இல்லாத போது எனக்கு நல்ல சாப்பாடு போட்டு, படிக்க வச்ச இன்னும் என்னோட பேஷனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க என்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது என பதிவிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் அலை ஓய்ந்தும் இப்போதும் அவர் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். அவரது பிறந்தநாளுக்கு பிக் பாஸ் பிரபலங்கள் முதல் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவருடைய நல்ல மனசுக்கு இன்னும் பெரிய உயரங்களுக்கு செல்வார். பிக் பாஸில் ரெட் கார்ட் கொடுத்தாலும் அதையும் சரித்திரமாக மாற்றி உள்ளார்.

pradeep-antony
pradeep-antony
- Advertisement -

Trending News