வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

செல்வராகன் நடிக்க கூப்பிட்டு வர மறுத்த பிரபுதேவா.. மிஸ் பண்ணிட்டோமேன்னு இப்பவும் புலம்பும் சூப்பர் ஹிட் படம்.!

நடன இயக்குனராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய பிரபுதேவா பின்னர் சினிமாவில் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார். இந்திய சினிமாவில் மைக்கேல் ஜாக்சனாக பார்க்கப்படும் இவர் தன்னுடைய திரை பயணத்தில் ஒரு இயக்குனராகவும் சாதித்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது படம் இயக்குவது எல்லாம் நிறுத்திக் கொண்டு வரிசையாக படங்கள் நடித்து வருகிறார் பிரபுதேவா.

போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற தமிழ் படங்களை இயக்கிய இவர் பாலிவுட்டிலும் படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். இப்போது ஹீரோவாக நிறைய படங்கள் நடித்தாலும் பிரபுதேவாவுக்கு எந்த படமும் வெற்றி படமாக அமையவில்லை என்பதுதான் உண்மை. தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பாகீரா திரைப்படம் கூட அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

Also Read: ஹிந்தி, தெலுங்கு மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் தனுஷ்.. சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளிய வியாபாரம்

தற்போது பிரபுதேவா அவருடைய சினிமா வாழ்க்கையில் மிஸ் பண்ணிய ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தின் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. தமிழில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் கதை ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து, இப்போது ஒரு வெற்றி இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர்தான் செல்வராகவன்.

துள்ளுவதோ இளமை திரைப்படத்திற்குப் பிறகு செல்வராகவன் இயக்கி மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் தான் காதல் கொண்டேன். இந்த படத்தில் தனுஷ் கேரக்டரில் முதலில் பிரபுதேவாவை நடிக்க வைக்க ரொம்பவே ஆசைப்பட்டு இருக்கிறார் செல்வராகவன். அவர் பிரபுதேவாவிடம் கதையும் சொல்லி இருக்கிறார். அப்போது பிரபுதேவாவுக்கு செல்வராகவன் மேல் அவ்வளவாக பெரிய நம்பிக்கை ஏற்பட வில்லையாம்.

Also Read: பாலிவுட் முதல் டோலிவுட் வரை 100 கோடி வசூலித்த தனுஷ்.. பான் இந்தியா பயத்தை காட்டிய கேப்டன் மில்லர்

செல்வராகவன் அப்போது ரொம்பவும் சின்ன பையனாக இருந்ததால் இவரை நம்பி எப்படி படம் பண்ணுவது என்று மறுத்துவிட்டாராம் பிரபுதேவா. செல்வாவும் வேறு வழியே இன்றி தன்னுடைய தம்பி தனுஷை கதாநாயகனாக வைத்து இந்த படத்தை இயக்கி முடித்தார். ஆனால் இந்த படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய சூப்பர் ஹிட் ஆனது.

பிரபுதேவா மட்டும் இந்த படத்திற்கு ஓகே சொல்லி இருந்தால் கண்டிப்பாக அவருடைய சினிமா வாழ்க்கை வேற லெவலில் மாறி இருக்கும். இந்த படத்தில் நடித்ததின் மூலம் தான் தனுஷுக்கு சினிமாவில் ஒரு அடையாளம் கிடைத்தது. இந்த படத்தை தவற விட்டுவிட்டு தற்போது பிரபுதேவா என்ன செய்கிறோம் என்ன படத்தில் நடிக்கிறோம் என்று கூட தெரியாமல் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read: தலைக்கு ஏரிய மம்மதை.. சூப்பர் ஹிட் கொடுத்த புகழ் போதையில் ஹெட் வெயிட் காட்டும் தனுஷ் பட இயக்குனர்

- Advertisement -

Trending News