நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு குறுக்கே நிற்கும் பிரபுதேவா பஞ்சாயத்து.. கல்யாண விஷயத்துல அம்மணி செம உஷாரு!

5 வருடமாக காதலித்து வந்தாலும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தற்போது வரை திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வருவது கோலிவுட் வட்டாரங்களில் கண்களை உறுத்தியுள்ளது.

இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க 4 பேர் கொண்ட குழு ஒன்று சமீபத்தில் நயன்தாரா சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் ஏன் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சுற்றி வருவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர்? என விசாரித்துள்ளனர்.

அதற்கு காரணம் பிரபுதேவா தான் என்ற திடுக்கிடும் உண்மையை குறிப்பிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் நயன்தாராவின் காதல் சர்ச்சைகள் பற்றி அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். முதலில் சிம்பு, பின்னர் பிரபுதேவா, அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் என அவர் மீது வராத காதல் சர்ச்சைகளே கிடையாது. இருந்தாலும் அதையெல்லாம் தன்னுடைய நடிப்பால் ஓரம் கட்டிவிட்டு தற்போது நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் திருமணத்தில் ஆசையில்லாமல் காதலிப்பதில் மட்டும் விருப்பம் கொண்டிருந்த நயன்தாராவுக்கு வரப்பிரசாதமாக வந்தவர்தான் விக்னேஷ் சிவன். நயன்தாரா இதுக்கு முன்னாடி என்ன தப்பு செய்திருந்தாலும் கவலை இல்லை என அவரிடம் சரணடைய, உடனடியாக தன்னுடைய காதலராக ஏற்றுக்கொண்டார்.

இருவரும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக காதலித்து வரும் நிலையில் திருமணத்தை தொடர்ந்து தள்ளிப் போட்டுக் கொண்டே வருகின்றனர். அதற்கு காரணம் நயன்தாரா மற்றும் பிரபுதேவா பஞ்சாயத்து தான். பிரபுதேவாவின் மீது உள்ள காதலால் உடனடியாக அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மதம் மாறி பின்னர் இருவரும் பிரிந்த பிறகு அதுவே விவாதப் பொருளாக மாறியது நயன்தாராவின் கண்முன்னே அவ்வப்போது வந்து செல்கிறது.

இதன் காரணமாக தற்போதைக்கு திருமணத்தை பற்றி யோசிக்காமல் காதலில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்பதில் உறுதியாக உள்ளாராம் நயன்தாரா. அப்படியே எசகு பிசகு என விக்னேஷ் சிவன் எது செய்தாலும் அப்படியே கழட்டிவிட்டு வண்டியை கிளப்பி விட வேண்டியதுதான் என்பது தான் நயன்தாராவின் எண்ணமாம்.

nayanthara-prabhudeva-cinemapettai
nayanthara-prabhudeva-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்