புதிய ரூட்டை பிடித்த பிரபுதேவாவின் பொய்க்கால் குதிரை எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

பிரபுதேவாவின் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மைடியர் பூதம் என்ற படம் ரிலீஸ் ஆனது. அதைத் தொடர்ந்து தற்போது சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பொய்க்கால் குதிரை திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

தன்னுடைய குழந்தையின் மருத்துவ செலவிற்காக தொழிலதிபர் வரலட்சுமி சரத்குமாரின் குழந்தையை கடத்த திட்டம் போடும் பிரபுதேவா அதில் ஜெயித்தாரா, இல்லையா என்பது தான் கதை. ஒரு கால் இழந்து மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கும் பிரபுதேவா சென்டிமென்ட் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

அப்பா மகள் செண்டிமெண்ட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் இமானின் இசையில் செல்லமே பாடல் நன்றாக இருப்பதாகவும், எமோஷனல் க்ரைம் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் வித்தியாசமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

poikkal kuthirai movie review
poikkal kuthirai movie review

முதல் பாதியில் சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக இருப்பதாகவும், பிரபுதேவா மகளுக்காக கஷ்டப்படும் அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல் படத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நடிகர்கள் அவர்களுக்கான கதாபாத்திரங்களில் நன்றாக பொருந்தி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

poikkal kuthirai movie review

அந்த வகையில் பிரபுதேவாவின் முந்தைய படங்களை காட்டிலும் இந்த படத்திற்கு ரசிகர்களின் பாராட்டு கிடைத்துள்ளது. சமீப காலமாக சில தோல்வி படங்களை கொடுத்து வரும் பிரபுதேவாவுக்கு இந்த படம் சற்று ஆறுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

poikkal kuthirai movie review
poikkal kuthirai movie review

ஆக மொத்தம் பிரபுதேவா புது ரூட்டில் மாற்றுத்திறனாளியாக கலக்கி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த விதத்தில் இப்படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்பதுதான் தற்போது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

poikkal kuthirai movie review
poikkal kuthirai movie review
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்