மோசமான இயக்குனருடன் கூட்டணி சேர்ந்த பிரபுதேவா.. இதுக்கு பிட்டு படத்துல நடிச்சுட்டு போலாமே!

பிரபுதேவா தற்போது இயக்கத்துக்கு ப்ரேக் கொடுத்துவிட்டு மீண்டும் நடிப்பில் களமிறங்கிய தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் ஏற்கனவே நடித்து முடித்த பல படங்களும் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் இன்று சினிமாவில் இயக்குநராக களம் இறங்கி சூப்பர் டூப்பர் வெற்றிப்படங்களை கொடுத்து வந்த பிரபுதேவா தேவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து ஏகப்பட்ட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. ஆனால் அதன்பிறகு அவர் நடித்த சில படங்கள் தோல்வியை சந்தித்ததால் நிறைய படங்கள் விலை போகாமல் அப்படியே கிடக்கின்றன.

இருந்தாலும் அவருக்குப் ஹீரோவாக வாய்ப்புகள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில் அடுத்ததாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் நடிக்கவுள்ளனர்.

ஏற்கனவே ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு பெயர் போன சந்தோஷ் பி ஜெயக்குமார் படத்தில் பிரபுதேவா ஒப்பந்தமாகியுள்ளது தமிழ் சினிமாவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் பிரபல முன்னணி இயக்குனர் பாரதிராஜாவையே மரியாதையின்றி பேசியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவும் ஒரு அடல்ட் வகை திரைப்படம் தான் என தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் ஏற்கனவே ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் என்ற குடும்ப திரைப்படத்தை இவர் கொடுத்துள்ளதால் எந்த மாதிரி கதை என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

அதற்கு பின்னர் மன்னிப்புக் கேட்டதெல்லாம் வேற கதை. அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே அடல்ட் படங்களாக இருப்பதால் பிரபுதேவாவும் அந்த லிஸ்டில் இணைந்து விட்டாரா என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். ஏற்கனவே பிரபுதேவா இன்னொரு விவகாரமான இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹீரா படத்தில் பெண்களை விரட்டி விரட்டி வேட்டையாடும் வல்லவனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

prabhu-deva-new-movie-cinemapettai
prabhu-deva-new-movie-cinemapettai
- Advertisement -