புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

வெளிவராமல் இருக்கும் பிரபுதேவாவின் 5 படங்கள்.. மரண பயத்தில் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் குரூப் டான்ஸ் ஆடிய பிரபுதேவா பின்பு படிப்படியாக கஷ்டப்பட்டு நடன இயக்குனர் ஆனார். இவர் நடனம் வித்தியாசமாக இருந்ததால் மக்கள் அனைவரும் இவரை ஏற்றுக்கொண்டனர். பின்னர் கதாநாயகனாக மாறினார். பல படங்களில் நடித்து நல்ல பெயரை எடுத்து நடனம், நடிப்பு என தமிழ் சினிமாவை தன் பக்கம் வைத்திருந்தார்.

இந்தியாவில் முன்னணி இயக்குனராக, நடன இயக்குனராக கொடிகட்டிப் பறந்த பிரபுதேவா. இன்று இவரை கண்டுக்க கூட ஆள் இல்லாமல் தனி ஆளாக சுற்றிக் கொண்டிருக்கிறார். கடந்த 5 வருடத்தில் இவருக்கு வெற்றி படங்கள் எதுவும் இல்லை. பெரிய அளவில் படங்களில் நடிப்பதும் இல்லை.

நயன்தாராவை காதலித்த பிரபுதேவா குடும்ப பிரச்சினையில் தன் மனைவியை விவாகரத்து செய்தார். தனது மகனையும் அந்த கெட்ட நேரத்தில் இறந்தார். நயன்தாராவையும் திருமணம் செய்யாமல் விட்டுவிட்டார். அன்று ஆரம்பித்த இவரது கெட்ட நேரம் இன்றுவரை அவரை பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது.

இப்பொழுது இவர் படம் இயக்குவது இல்லை. பாடலுக்கு நடனம் மட்டுமே அமைத்துக் கொண்டிருக்கிறார். தற்சமயம் இவர் நடித்து தமிழில் எந்தப் படங்களும் வெற்றி பெறவில்லை. அதனால் இவர் மார்க்கெட் கீழே சென்றுள்ளது. இவர் நடித்து தமிழில் எங்- மங்- ஜங், ஊமை விழிகள், ரேக்ளா, லக்கி மேன், முசாசி என்று தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இவருக்கு மார்க்கெட் இல்லாததால் இவர் படங்களை வெளியிட அந்த நிறுவனங்கள் தயங்குகின்றன.

நடனம், நடிப்பு, இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமைகள் தொட்டதெல்லாம் வெற்றி கண்ட பிரபுதேவாவிற்கு, இன்று இருக்கும் இடம் தெரியாமல் இவருக்கென்று மார்க்கெட் ஏதுமில்லாமல் பிரபுதேவா இப்படி இருப்பது இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. இதிலிருந்து இவர் எப்படி மீண்டு வர போகிறார் என்று தெரியவில்லை.

தமிழ் சினிமாவில் இருந்து சென்ற பிரபுதேவா இந்திய அளவில் முதன்மையான இயக்குனர், நடன இயக்குநராக மாறினார் மற்றும் பல மொழி படங்களில் நடித்தார். இன்று கடைசியாக தமிழ் சினிமாவில் வந்து தஞ்சம் அடைந்துள்ளார். தமிழ் சினிமாவும் இவரை ஏற்க மறுக்கிறது, பிரபுதேவா பழைய நிலைக்கு திரும்ப வர ரசிகர்கள் அதுவும் தமிழ் சினிமா ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

Trending News