சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பிரபுதேவா படம் வருவதற்கு முன்னே.. கல்லா கட்டிய தயாரிப்பாளர்.!

படவாய்ப்பு குறைந்து வரும் சூழ்நிலையில் பிரபுதேவாவிற்கு ஜாக்பாட்  அடித்துள்ளது. படம் வெளிவருவதற்கு முன்னதாகவே தயாரிப்பாளர் கல்லா கட்டி உள்ளார் என்பது கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளதாம்.

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது மை டியர் பூதம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் ஆறு மாதத்திற்கு முன்பாகவே வெளியான நிலையில் கூடிய விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.

இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று புகழப்படும் பிரபுதேவா, பாலிவுட்டில் நடன இயக்குனராகவும், இயக்குனராகவும் தற்போது பணியாற்றி வருகிறார் இதனிடையே தற்போது தமிழில் இயக்குனர் ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மை டியர் பூதம் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

மாயாஜாலங்கள் நிறைந்த இப்படத்தின் ட்ரைலர் குழந்தைகளை உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும் இப்படத்தை பார்ப்பதற்கு குழந்தைகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கிராபிக்ஸ் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள மை டியர் பூதம் திரைப்படம் கிட்டத்தட்ட ஏழு கோடி ரூபாய் வரை பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாம்.

இதனிடையே இத்திரைப்படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே 15 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டியுள்ளது படக்குழுவினருக்கு மிகப்பெரிய குஷியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் பிரபுதேவா தற்போது தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் உள்ள நிலையில் இவரது திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே இரட்டிப்பாக வசூல் சாதனை படைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மேலும் இத்திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானால் கண்டிப்பாக மேலும் பல கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைக்கும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரபுதேவா மொட்டை அடித்தும், மீசை, தாடிகள் இல்லாமலும் சில காட்சிகளில் நடித்துள்ளார்.

மாயாஜாலம் நிறைந்த இத்திரைப்படத்தில் பூதமாகவும் குழந்தைகளை கவரும் வகையிலும் பிரபுதேவா நடித்துள்ளார். பல நகைச்சுவை காட்சிகளுடன் எடுக்கப்பட்ட இப்படத்தில் இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற மாஸ்டர் பாடல் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News