கேஜிஎப் இயக்குனரை மலைபோல் நம்பி இருக்கும் பிரபாஸ்.. விட்டதை பிடிக்க போட்ட பக்கா பிளான்!

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து சூப்பர் ஹிட் அடித்த படம் தான் பாகுபலி. இதன் இரண்டு பாகங்களிலும் கதாநாயகனாக நடித்த பிறகு பிரபாஸ் நடித்த அடுத்தடுத்த படங்களில் அவரிடம் அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.

ஆனால் பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் சுஜித் எழுதி இயக்கிய வெளியான சாஹோ திரைப்படம் படுதோல்வியை பெற்றுத்தந்தது. அதன் பிறகு பிரபாஸ் நடிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதி ரிலீசான காதல் ரொமான்டிக் திரைப்படமான ராதே ஷ்யாம் திரைப்படமும் இவருடைய இரண்டாவது தோல்விப் படமாக மாறியிருக்கிறது.

இந்தப்படத்தை உலகத்தரத்தில் படமாக்க வேண்டும் என்பதை முனைப்புடன் செயல் பட்டதை கொஞ்சம் திரைக்கதைக்கு காட்டியிருந்தால் படம் சூப்பர் ஹிட் அடித்த நல்ல காதல் படமாக மாறி இருக்கும். இந்தப் படத்தின் தோல்விக்கு காரணம் என்ன என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபாஸ் தெரிவித்திருந்தார்.

படம் சரியாக ஓடாதததற்கு கொரோனா பரவலும் ஒரு காரணமாக இருக்கலாம். அத்துடன் திரைக்கதையிலும் ஏதாவது குறை இருந்திருக்கலாம். ஒருவேளை இந்தப் படத்தில் மக்கள் என்னை அந்த கதாபாத்திரத்தில் பார்க்க விரும்பவில்லை போன்றே தெரிகிறது. பாகுபலி படத்தைத் தொடர்ந்து நான் நடிக்கும் படங்களை இயக்கம் இயக்குனர்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. வரலாற்றுக் கதையாக எடுக்கப்பட்ட பாகுபலி படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

அதுபோன்ற படங்களில் மீண்டும் நடித்து, தொடர்ந்து என்னுடைய முழு முயற்சியையும் கொடுப்பேன் என்று பிரபாஸ் கூறியிருக்கிறார். எனவே பிரபாஸ் அடுத்ததாக கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் உடைய சலார் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

எனவே இந்தப்படத்தை கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் வரும் 2023 ஆம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஆகையால் கேஜிஎஃப் 2 படத்தின் வெற்றி இயக்குனரான பிரசாந்த் நீல் உடன் பிரபாஸ் காம்போ வெற்றி பெறுமா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.