400 கோடி பட்ஜெட்டில் உருவான பிரம்மாண்ட படம்.. ரிலீஸ் தேதி அறிவித்த பிரபாஸ்.!

தமிழ் சினிமாவில் பாகுபலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரபாஸ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே தெலுங்கில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் பிரபாஸ் நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பாகுபலி வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் கோடிக்கணக்கில் செலவு செய்து படமாக்கப்பட்டு வருகின்றன. சலார் படம் 300 கோடி பட்ஜெட்டிலும், ஆதி ப்ரூஸ் 500 கோடி பட்ஜெட்டிலும் மற்றும் ராதே ஷ்யாம் 400 கோடி பட்ஜெட்டில் படமாக்கப்பட்டு வருகிறது.

பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் கோடிக்கணக்கில் செலவு செய்து வருவதால் படத்தை எப்படியாவது வெற்றி பெற செய்துவிட வேண்டும் என்பது பிரபாஸ் மற்றும் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தற்போது பிரபாஸ் ராதே ஷ்யாம் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

radhe shyam
radhe shyam

தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தை வெளியிடாமல் படக்குழு இருந்தனர். தற்போது ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸ் இருக்கும் புகைப்படத்துடன் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி வெளியாவதாக அறிவித்துள்ளனர்.

இதனால் தற்போது பிரபாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். மேலும் இப்படத்தை பிரம்மாண்டமாக பல திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர். மேலும் அனைத்து மொழிகளிலும் வெளியீட்டு வசூலையும் வாரிக் குவித்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்