ராதே ஷ்யாம் படத்தின் புதிய போஸ்டர்.. 400 கோடி பட்ஜெட் சொன்னாங்க, போஸ்டர பாத்தா அப்படி தெரியலையே!

பிரபாஸ் என்றாலே பிரம்மாண்டம் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது போல. அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் குறைந்தது 250 கோடி பட்ஜெட்டுக்கு மேல் தான் உருவாகி வருகிறது. இதுவே அவருக்கு ஒரு விதமான அழுத்தத்தைக் கொடுத்து வருகிறாராம்.

பாகுபலி படங்களுக்கு முன்புவரை பிரபாஸ் என்றால் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடும் நாயகனாக மாறி விட்டார்.

அந்த வகையில் தற்போது பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதில் ராதேஷ்யாம் 400 கோடி, சலார் 300 கோடி, ஆதி-புருஷ் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம்தான் ராதே ஷ்யாம். முழுக்க முழுக்க காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை 400 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். ஆனால் படத்தின் போஸ்டர்களை பார்க்கும் போது இதற்கு எதற்கு 400 கோடி என யோசிக்க வைக்கிறது.

radhe-shyam-new-poster
radhe-shyam-new-poster

சமீபத்தில் ராதேஷ்யாம் படத்தின் டீசர் வெளியானது. அதை பார்க்கும்போது படம் முழுக்க செட்டு போட்டு எடுத்துள்ளனர் என்பது மட்டும் அப்பட்டமாக தெரிந்தது. தற்போதெல்லாம் நேரடியாக லொகேஷன் சென்று செலவை மிச்சபடுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் தேவையில்லாமல் செட்டு போட்டு பல கோடிகளை செலவழித்து வருகிறார்கள் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதேபோல் சாதாரண படங்களுக்கு இருக்கும் போஸ்டர் போலதான் ராதேஷ்யாம் படங்களின் போஸ்டர்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதற்கு எதற்கு தேவையில்லாமல் 400 கோடி செலவு என இப்போதே சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட ராதேஷ்யாம் படக்குழுவினர், படம் வந்த பிறகு 400 கோடி எதற்கு என்பதை நீங்களே தெரிந்து கொள்வீர்கள் என பதிலடி கொடுத்து வருகிறார்களாம்.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -