84 ஏக்கரில் பிரபாஸின் பண்ணை வீடு.. வாயை பிளக்க வைக்கும் மொத்த சொத்து மதிப்பு

பிரபாஸ் ஆரம்பத்தில் எத்தனையோ வெற்றி திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தெலுங்கு நடிகரான இவர் அந்த படத்திற்கு பிறகு தான் உலக அளவில் பிரபலம் அடைந்தார். அதன் காரணமாகவே இப்போது அவருக்கு தமிழ் உட்பட அனைத்து மொழியிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

பிரம்மாண்ட வீடு

prabhas-house
prabhas-house

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ராதே ஷ்யாம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதை தொடர்ந்து தற்போது ஆதி புருஷ் திரைப்படத்தில் இவர் நடித்து முடித்துள்ளார். ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் பிரபாஸ் ராமனாக நடித்திருக்கிறார்.

Also read: ரீல் ஹீரோயினை நிஜ ஜோடியாக்கிய பிரபாஸ்.. 43 வயதில் நடிகையுடன் ஏற்பட்ட முத்துன காதல்

550 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளர் இந்த படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் சலார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவரின் ஆடம்பர வாழ்க்கை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அதிலும் அவருடைய பிரம்மாண்ட வீட்டின் மதிப்பும் தெரியவந்துள்ளது.

பிரபாஸின் வீடு

prabhas-actor
prabhas-actor

அந்த வகையில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிரபாஸ் அரண்மனை போன்ற வீடு, நீச்சல் குளம், தோட்டம் என செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகிறார். அதில் அவருடைய வீட்டின் மதிப்பு மட்டுமே 60 கோடியை தாண்டுமாம். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களுக்காகவே இவர் இரண்டு கோடி வரை செலவழித்து இருக்கிறார்.

Also read: போஸ்டருடன் வெளியானது ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதி.. பிரபாஸ் பிறந்தநாளுக்கு கிடைத்த டபுள் ட்ரீட்

அதைத்தொடர்ந்து 84 ஏக்கர் பரப்பளவில் இவருக்கு ஒரு பண்ணை வீடும் இருக்கிறது. அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்கள் வசிக்கும் ஏரியாவில் உள்ள அந்த பண்ணை வீட்டில் தான் பிரபாஸ் அதிக நேரம் செலவழிப்பாராம். ஏனென்றால் அழகான வீடு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று அவர் அடிக்கடி கூறுவது உண்டு அதனாலேயே அவருக்கு மிகவும் பிடித்த மாதிரியாக தன்னுடைய பண்ணை வீட்டை உருவாக்கி இருக்கிறார்.

தோட்டம்

prabhas-garden
prabhas-garden

இயற்கை அழகுடன் இருக்கும் அந்த வீட்டில் தான் அவர் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் தங்குவாராம். இது மட்டுமல்லாமல் அவருக்கு நகரின் முக்கிய இடங்களில் எல்லாம் பல கோடி மதிப்பிலான சொத்துக்களும் இருக்கிறது. இப்படி ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழும் பாகுபலி நாயகனின் வீடு பற்றிய போட்டோக்கள் இணையதளத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

ஆடம்பர வாழ்க்கை வாழும் பாகுபலி நாயகன்

prabhas-home
prabhas-home

Also read: படமே இன்னும் ரிலீஸ் ஆகல.. தோல்வி பயத்தில் பல கோடியில் பரிசளித்த பிரபாஸ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்