அந்த ஒரு விஷயம் வேண்டவே வேண்டாம் எனக் கூறிய பவர் ஸ்டார்.. கேட்காமல் விளம்பரப்படுத்திய வனிதா.!

தமிழ் சினிமாவில் காமெடியனாக ஒருசில படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் பவர் ஸ்டார். இவரது பெயர் சீனிவாசன்னாக இருந்தாலும் ரசிகர்கள் இவரை பவர் ஸ்டார் என அழைத்து வந்தனர். தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு இந்த பெயர் செட் ஆகுதோ இல்லையோ நம்ம பவர் ஸ்டாருக்கு தான் இந்த பெயர் கச்சிதமாக செட் ஆகும். அந்த அளவிற்கு பவர் காமெடிகளை  சொல்வதில் வல்லவர் என  பவர் ரசிகர்கள் கொடி பிடித்து வருகின்றனர்.

ஆனால் சமீபகாலமாக பவர் ஸ்டார் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் மௌனம் காத்து வந்தார். அதற்கு ஒரு சிலர் பவர்  ஸ்டார் இனிமேல் படங்களை விட்டுவிட்டு தொழில் துறையில் கவனம் செலுத்த இருப்பதாக கூறி வந்தனர்.

இதைப்பற்றி பவர் ஸ்டாரிடம் கேட்ட போது கண்டிப்பாக படத்தில் நடிப்பேன் என கூறினார்.அதுமட்டுமில்லாமல் இவர் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் உடல்நலக்குறைவு தான் எனவும், தற்போது தான் அதனிலிருந்து வெளியே வந்துள்ளதாகவும் கூறினார்.

vanitha-power-star
vanitha-power-star

மேலும் பவர் ஸ்டாரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. நீங்களும் வனிதாவும் மாலை மாற்றிக் கொண்ட புகைப்படம் வெளியானது. அதை பற்றி கூறுங்கள் என கூறினார். அதற்கு பவர் ஸ்டார் பிக்கப் படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட். அப்போது இந்த மாதிரி புகைப்படத்தை எடுக்க வேண்டாம் என பலமுறை கூறினேன். ஆனால் படக்குழுவினர் கேட்கவில்லை. மேலும் பெரிதாக வனிதாவும் கண்டுகொள்ளவில்லை என கூறினார்.

இப்புகைப்படத்தை பொறுமையாக வெளியிடலாம் என முடிவு செய்து இருந்தோம். ஆனால் வனிதா சமூக வலைதளப் பக்கத்தில் யதார்த்தமாக வெளியிட்டு விட்டார். இப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா உடனே இவர்கள் இருவருக்கும் கல்யாணம் என ஒரு சப்ப கதையை கட்டிவிட்டனர். அதனைப் பார்த்துவிட்டு பலரும் பவர் ஸ்டாருக்கு போன் செய்து திருமணம் இருவருக்கும் நடந்து விட்டதா என கேட்டதாக கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்