அப்ப மேடையில் அழுததெல்லாம் நடிப்பா.. இளையராஜா குறித்து வெளியிட்ட பதிவு!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, ஆர்கே சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாமனிதன் திரைப்படம் வருகின்ற ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் சேர்ந்து இசை அமைக்கின்றனர். இந்தப் படத்தை யுவன் தயாரிப்பதால் படத்தை சிறப்பாகவும், அவர்கள் நினைவு கூறத்தக்க படமாகவும் எடுக்க வேண்டும் என்பதற்காக சீனுராமசாமி இந்த படத்திற்காக நான்கு வருடம் மெனக்கெட்டிருக்கிறாராம்.

இதனால் மாமனிதன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சீனு ராமசாமி விம்மி விம்மி அழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதாவது மாமனிதன் படம் உருவாக்கம், ரீ ரெக்கார்டிங் இரண்டிற்குமே இயக்குனர் சீனு ராமசாமியை கொஞ்சம் கூட மதிக்கவில்லை. அத்துடன் கவிஞர் பா. விஜய் அவர்களுக்கு சீனுராமசாமி போன் செய்து பேசும் போது கூட, பா .விஜய் ஏதோ கள்ளக்காதலியிடம் பேசுவதுபோல் தயங்கி தயங்கி பேசுயுள்ளார்.

மேலும் இந்தப்படத்தில் யார் பாடல் எழுதுகிறார், என்ன செய்கிறார் என்பது எனக்கு கொஞ்சம் கூட தெரியாமல் படத்தை குறித்த முடிவுகளை எடுக்கும்போது காரணமின்றி நிராகரிப்பது மிகப்பெரிய வலியையும், தூக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது நான் தான் படத்தின் இயக்குனர். ஆனால் என்னை கூட அவர் இசை ரெக்கார்டு செய்யும்போது அனுமதிக்கவில்லை.

மேலும் ரெக்கார்டிங் செய்யும் போது தன்னிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. மேலும் தன்னை மதிக்கவும் இல்லை உள்ளே கூட அனுமதிக்கவில்லை எனக் கூறியுள்ளார். ஆனால் யுவன் சங்கர் ராஜாவுடன் நட்பில் தான் உள்ளேன். அதை கூட அவர் நினைத்து பார்க்கவில்லை என அந்த இசை வெளியீட்டு விழாவில் சீனு ராமசாமி மனம் வருந்தி கூறியுள்ளார்.

இதனால் பலரும் இளையராஜாவே பல்வேறு விமர்சனங்கள் முன்வைத்தனர். தற்போது சீனு ராமசாமி இசைஞானியிடம், ‘எனது அன்பை உணர்த்த வழியறியாது நான் பத்திரிக்கையாளர் சந்திப்பில், அதை நான் உணர்ந்தேன். சிலர் அவரை சிறுமை செய்யத் துணிவது, மேலும் வருத்தம் அளிக்கிறது.

அது என் நோக்கத்திற்கு எதிரானது. மாமனிதன் திரைப்படம் அவரது புகழை பாடும் அவர் மீதான என் அன்பை பேசும்’ என பதிவிட்டுள்ளார். இவ்வாறு அந்தர் பல்டி அடிக்கும் சீனு ராமசாமி வெளியிட்ட கருத்துக்கு ‘அப்ப மேடையில் அழுததெல்லாம் நடிப்பா’ என்று பலரால் விமர்சிக்கப்படுகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்