20 நாட்களில் பல கோடி வசூலித்த போர் தொழில்.. தியேட்டர் ஓனர்களை கதி கலங்க வைத்த ஓடிடி

Por Thozhil: விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் போர் தொழில். 20 கோடிக்கும் கம்மியான பட்ஜெட்டில் தான் இப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா போன்ற பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

சரத்குமாரின் நடிப்பு திறமைக்கு சரியான தீனி போட்ட படம் என்றால் அது போர்தொழில் தான். சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக கொலைக்கான காரணத்தை அவர் விசாரிக்கும் முறை மற்றும் புலனாய்வு ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதேபோல் அசோக் செல்வனின் நடிப்பும் அபாரம்.

Also Read : ரீ என்ட்ரியில் சரத்குமார் பட்டையை கிளப்பிய 6 படங்கள்.. பழுவேட்டையராக ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியான சுப்ரீம் ஸ்டார்

இவ்வாறு படத்துக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. அதுமட்டுமின்றி படத்திற்கு கிடைத்த விமர்சனம் காரணமாக ரசிகர்கள் தியேட்டரில் அலைமோத ஆரம்பித்தனர். இதனால் கிட்டத்தட்ட 20 நாட்களிலேயே உலக அளவில் 50 கோடி வசூலை போர் தொழில் படம் அள்ளி உள்ளது.

இப்போதும் இந்த படத்திற்கு வரவேற்பு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் போர் தொழில் படத்தின் ஓடிடி உரிமையை சோனி லைவ் பெற்று இருக்கிறது. ஆகையால் வருகின்ற ஜூலை மாதம் ஏழாம் தேதி ஓடிடியில் போர் தொழில் படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் கதிகலங்கி போய் நிற்கிறார்கள்.

Also Read : 2 வாரம் உதயநிதி போடப் போகும் ஆட்டம்.. சரத்குமார் மட்டுமே கொடுக்கும் பெரிய டஃப்

காரணம் என்னவென்றால் இப்போது தியேட்டரிலேயே இப்படம் சக்கை போட்டு வருகிறது. இந்நிலையில் ஓடிடியில் வெளியானால் இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குக்கு வந்து பார்ப்பது கடினம். இதனால் இப்போது உள்ளதை விட பல மடங்கு லாபம் பார்க்கலாம் என்று பார்த்த தியேட்டர் உரிமையாளர்கள் நினைப்பில் மண்ணள்ளி போடும் விதமாக இந்த சம்பவம் உள்ளது.

ஆகையால் திரையரங்கு உரிமையாளர்கள் இன்னும் ஒரு மாதமாவது போர் தொழில் படம் திரையரங்குகளில் ஓட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஜூலை மாதத்தில் கண்டிப்பாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்பதில் அந்நிறுவனம் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

Also Read : இனிமே சின்ராச கையில பிடிக்கவே முடியாது.. சூப்பர் ஹிட் படத்தின் பார்ட் 2-வுக்கு தயாராகும் சரத்குமார்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்