15 வருடம் கழித்து மூத்த நடிகருடன் ஜோடி போடும் த்ரிஷா.. வாய்ப்பு இல்லாததால் வயசை பாக்கல போல!

டோலிவுட்டில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் சிரஞ்சீவி. இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை சிரஞ்சீவி 150 படங்களுக்கு மேல்  தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

தற்போது சிரஞ்சீவி ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீசை எதிர்நோக்கி அவருடைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து பணிபுரிய தமிழ் நடிகை ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதாவது ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து முடித்த கையோடு, சிரஞ்சீவி மலையாள மெகா ஹிட் படமான ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளாராம். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளாராம்.

மேலும் லூசிபர் மலையாள வெர்ஷனில் காதல் காட்சிகள் எதுவும் இடம் பெற்றிருக்காது. ஆனால் தெலுங்கு ரீமேக்கில் காதல் காட்சிகளை இணைக்க மோகன் ராஜா திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பிரபல தமிழ்  நடிகை திரிஷாவை படக்குழு தேர்வு செய்து இருப்பதாகவும் தெரிகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு சிரஞ்சீவியும், திரிஷாவும் ஜோடியாக இணைந்து ஸ்டாலின் என்ற படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து இந்த ஜோடி திரையில் சேர உள்ளதால் இந்த படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு இன்னும் சற்று அதிகமாக ஏற்பட்டுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்