த்ரில்லர் படத்தில் இவருக்கு என்ன வேலை? தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கும் பிரசாந்த்

எப்படியாவது தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து தன்னுடைய இழந்த இடத்தை மீட்டு விட வேண்டும் என கடந்த சில வருடங்களாகவே போராடிக் கொண்டிருக்கிறார் பிரசாந்த். ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை.

இந்நிலையில் இதுதான் கடைசி முயற்சி என தற்போது பாலிவுட்டில் சூப்பர் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் தொடங்குவதற்கு முன் பல பஞ்சாயத்துகள்.

முதலில் இந்த படத்தை இயக்குவதற்காக இயக்குனர் மோகன் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பிறகு தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலகி, பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பெடரிக் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தற்போது அவரும் விலக என்னுடைய மகனை நானே கரை சேர்த்துக் கொள்கிறேன் என அந்தகன் படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கி வருகிறார் தியாகராஜன். இந்த படம் ஒரு திரில்லர் அம்சம் கொண்ட கதை.

இதுவரை திரில்லர் படங்களில் சமுத்திரக்கனி நடித்ததாக பலருக்கும் ஞாபகம் இல்லை. இதுவரை கருத்து சொல்பவர், காமெடி செய்பவர் என அதே கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சமுத்திரக்கனியை இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாகவே சமுத்திரக்கனிக்கு இயக்குனரை விட நடிகராக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமுத்திரக்கனியின் நல்ல சினிமா ராசி பிரசாந்துக்கு ஒர்க் அவுட்டாகி இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

samuthirakani-cinemapettai
samuthirakani-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்