Biggboss 8: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 8 இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. இதற்கான ப்ரோமோ நேற்று அதிரடியாக வெளியானது. இந்த வருடம் கமல் நிகழ்ச்சியை விட்டு விலகிய நிலையில் விஜய் சேதுபதி அந்த இடத்திற்கு வந்துள்ளார்.
இதை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்து டிஆர்பிக்கு பிள்ளையார் சுழி போட்டது. அதைத்தொடர்ந்து நேற்று வெளியான ப்ரோமோவும் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக இருந்தது. அதாவது மக்கள் விஜய் சேதுபதிக்கு ஏகப்பட்ட அறிவுரைகளை சொல்வது போல் அந்த ப்ரோமோ இருந்தது.
அதைத்தொடர்ந்து ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு, விருப்பமான நிகழ்ச்சியை நெருக்கமாக்க வருகிறது என மக்கள் செல்வன் ஹைப் ஏற்றியிருந்தார். உண்மையில் இந்த மாற்றம் நிச்சயம் சுவாரசியத்தை மட்டுமல்லாமல் புத்துணர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.
இதனால் நிகழ்ச்சியை காண ஆடியன்ஸ் ஆர்வமாகவே இருக்கின்றனர். இந்த சூழலில் பிக் பாஸ் வீட்டுக்கு சர்ச்சையான ஒரு ஜோடி வரப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளது. எவ்வளவு சாந்த சொரூபியாக இருந்தாலும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தால் சண்டைக்கோழி தான்.
சர்ச்சை ஜோடி கொடுக்கும் என்ட்ரி
ஆனால் கொஞ்சம் விவகாரமான ஆட்களை தேடிப் பிடிப்பது தான் விஜய் டிவியின் நோக்கம். அப்படித்தான் இத்தனை சீசன்களாக இருந்தது. அந்த வகையில் செல்லமா சீரியல் ரீல் ஜோடியான அர்னவ், அக்ஷிதா இருவரும் பிக்பாஸில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
முன்னதாக அர்னவ் தன் மனைவியான நடிகை திவ்யாவுடன் கருத்து வேறுபாட்டில் இருந்தார். இந்த பிரச்சனை போலீஸ் கேஸ் என சென்றது. அதில் அர்னவுக்கும் அக்ஷிதாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூட திவ்யா புகார் தெரிவித்திருந்தார்.
இது குறித்த ஆடியோ உரையாடல்கள் கூட வைரலானது. அதேபோல் இந்த ஜோடி சோஷியல் மீடியாவில் செய்யும் ரீல்ஸ் கூட வெகு பிரபலம். அப்படி இருக்கும் சூழலில் இவர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருவது நிச்சயம் சரியான கன்டென்ட் ஆக இருக்கும்.
இதைத்தான் விஜய் டிவியும் எதிர்பார்க்கிறது. ஆக மொத்தம் ரீல் ஜோடியாக உள்ளே போகும் இவர்கள் ரியல் ஜோடியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எது எப்படியோ எதிர்பாராததை எதிர்பார்ப்பது தானே இந்த நிகழ்ச்சி.
பிக் பாஸ் 8-க்கு கன்டென்ட் கொடுக்க வரும் ஜோடி
- கமலுக்கே விபூதி அடிக்க பார்த்த விஜய் டிவி
- பிக்பாஸ் 8-க்கு வரப்போகும் பழைய போட்டியாளர்
- வந்தாச்சு புது பிக் பாஸ், சீசன் 8 தொகுத்து வழங்கப் போவது யார் தெரியுமா?