சினிமாவைக் கெடுத்ததே செல்வராகவன் தான்.. பெயரைக் கேட்டாலே பிரபல இயக்குனருக்கு ஏறும் பிபி!

செல்வராகவனை தமிழ் சினிமாவின் ஜீனியஸ் இயக்குனர், ஹாலிவுட் லெவல் இயக்குனர் என ஒருபக்கம் ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருக்கும் நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் செல்வராகவன் பெயரைக் கேட்டாலே பொரிந்து தள்ளும் அவலம் நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் எதார்த்த கதைகளை கொடுத்து ரசிகர்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்த செல்வராகவன் சமீபகாலமாக தன்னுடைய படைப்புகளின் மூலம் அதிக ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறார் என்பதும் உண்மையான விஷயம் தான்.

முன்னர் இருந்தது போல் செல்வராகவன் படங்கள் தற்போது இல்லை. அப்போது வந்த செல்வராகவன் படங்கள் அனைத்தும் குறிப்பாக இளம் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு பெற்றது. அதற்கு காரணம் அந்த இளம் ரசிகர்கள் இளம் வயதில் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே படமாக்கி வைத்திருந்தார்.

ஆனால் அது தான் தவறு என தமிழ் சினிமாவில் சங்கருக்கு அடுத்து பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரவீன் காந்தி என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓப்பனாக தெரிவித்துள்ளார். சில விஷயங்களில் செல்வராகவன் மீது தனக்கு கோபம் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தில் பிரபு தேவாவுக்கு தந்தையாக எஸ் பி பாலசுப்பிரமணியம் நடித்திருப்பார். இந்தக் காலத்தில் இப்படி ஒரு தந்தையா! என அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு அந்த கதாபாத்திரங்கள் அவ்வளவு வலுவாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் இளம் ரசிகர்களும் அந்தப் படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய தந்தையை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

ஆனால் அதன் பிறகு வெளிவந்த செல்வராகவன் படங்களில் ஆரம்பத்திலிருந்து தந்தையை கெட்ட வார்த்தையில் திட்டுவது போன்றும், கடைசியாக ஒரு இடத்தில் மட்டும் தந்தை மகன்மீது பாசத்தை பொழிவது போல ஒரு சென்டிமெண்ட் காட்சியை வைத்து ரசிகர்களை ஏமாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இப்படி செய்தால் ரசிகர்கள் எப்படி தந்தையை மதிப்பார்கள் எனவும் செல்வராகவன் மீது செம கோவத்தில் உள்ளார்.

ஆனால் இதைக் கேள்விப்பட்ட சினிமா வாசிகள், செல்வராகவன் இருக்கவேண்டிய உயரத்தில் பிரவீன் காந்தி இருக்க வேண்டியது எனவும், பொறாமையால் தான் அவரை இப்படி போகும் இடமெல்லாம் திட்டித் தீர்க்கிறார் இருக்கிறார் எனவும் கூறி வருகின்றனர். இதில் எது உண்மை என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

praveen-gandhi-director
praveen-gandhi-director
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்