விஜய்யும் இல்ல, அஜித்தும் இல்ல, அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான்.. தேரை இழுத்து தெருவில் விடும் இயக்குனர்

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜீத் ஆகிய இருவரின் ரசிகர்களுமே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் அஜித்தான் என சமூக வலைதளங்களில் சண்டை போட்டு வருகின்றனர்.

நான் ஒருத்தன் இருக்கேன்டா என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னமும் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கொண்டிருந்தாலும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற வாக்குவாதம் இணையத்தில் அதிகமாக காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு முன்னணி நடிகரை உள்ளே இழுத்து விட்டு வம்பிழுத்துள்ளார் பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி. ரட்சகன் மற்றும் ஜோடி போன்ற படங்களை இயக்கியவர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யூட்யூப் தளத்திற்கு பேட்டி கொடுத்த பிரவீன் காந்தி, ரஜினி வழியில் விஜய் சேதுபதி மிக வேகமாக வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். பல வருடங்களாக சினிமா வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் இயக்குனர்கள் தற்போது அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கும் நடிகர்களுக்கு அவ்வப்போது வலை விரிக்க இந்த மாதிரி ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.

இதையெல்லாம் கேட்டுவிட்டு சிரித்து விட்டு போய் விட வேண்டும். சீரியசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என கோலிவுட் வட்டாரம் கிண்டலடிக்கும் நிலைமைக்கு விஜய் சேதுபதியை ஆளாகிவிட்டார் பிரவீன் காந்தி.

ஏற்கனவே மற்ற நடிகர்களின் சாயல் இல்லாமல் தனித்துவமாக இருக்க வேண்டும் என ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை மீண்டும் ஸ்டார் வட்டாரத்திற்கு இழுக்க முயற்சி செய்கிறார் போல. ஊரடங்கில் இரண்டு கதை எழுதி வைத்துள்ளாராம், ஒருவேளை அந்தக் கதைகளில் ஹீரோவாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பிட்டு போடுகிறாரா எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர்.

vijay-sethupathi-cinemapettai
vijay-sethupathi-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்