ஏ ஆர் ரஹ்மானுக்காக 20 வருடம் காத்திருந்த இயக்குனர்.. ஆஸ்கார் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறாராம்

ஏ ஆர் ரஹ்மானுடன் பணியாற்ற வேண்டும் என கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் காத்துக் கொண்டிருந்த இயக்குனருக்கு சமீபத்தில் வாய்ப்பு கிடைத்ததை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சந்தோஷத்துடன் பகிர்ந்துள்ளார்.

இசை என்றால் இளையராஜாதான் என்ற போதையில் இருந்த ரசிகர்களை திடீரென ரோஜா படத்தின் மூலம் தன் பக்கம் இழுத்தவர் தான் ஏ ஆர் ரகுமான். அதுவரை கேட்காத புதிய இசை. காதல் ரசம் சொட்டச் சொட்ட உருவான ரோஜா படத்தின் ஆல்பம் இன்றுவரை ரசிகர்களின் பேவரைட் ஆக இருந்து வருகிறது.

அதன்பிறகு ஏ ஆர் ரகுமானின் வளர்ச்சியை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் பணியாற்றத் தொடங்கினார். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்த முத்து மற்றும் படையப்பா படங்கள் இன்றும் பிஜிஎம்காக பேசப்படுகின்றன.

இவ்வளவு ஏன் இன்றும் பலரது ரிங்டோனாக இருப்பது படையப்பா மற்றும் முத்து பிஜிஎம் தான். அப்படிப்பட்ட ஏ ஆர் ரகுமானுடன் 20 வருடமாக போராடியும் வாய்ப்பு கிடைக்காத பிரபல இயக்குனர் பார்த்திபனுக்கு தற்போது உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் கதையில் உருவாகும் இரவின் நிழல் படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

இதற்கான தகவலை டிவிட்டர் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற ஆர் பார்த்திபன் சமீபத்தில் ஒத்த செருப்பு என்ற படத்தின் மூலம் ஆஸ்கார் வரை சென்று அனைவரது பார்வையையும் தன்பக்கம் திரும்பினார்.

r-parthiban-cinemapettai
r-parthiban-cinemapettai

தற்போது இரவின் நிழல் என்ற படத்தின் மூலம் ஒரே ஷாட்டில் மொத்த படத்தையும் எடுத்து அனைவரையும் பிரமிக்க வைக்க உள்ளாராம். ஆஸ்கார் வரை பேசப்படும் என உறுதியாக நம்பியுள்ள பார்த்திபன் இந்த படத்திற்காக ஏ ஆர் ரகுமானை ஒப்பந்தம் செய்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது.

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -