வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கற்பனையிலேயே யூகிக்க முடியாத காம்பினேஷன்.. ஜெயம் ரவியை காப்பாற்ற போகும் மாஸ் இயக்குனர்

சமீபகாலமாக ஜெயம் ரவி நடிக்கும் படங்கள் எதுவும் அவருக்கு அவ்வளவாக கை கொடுக்கவில்லை. தொடர்ந்து தோல்வியடையும் படங்களால் அவர் இப்போது ரொம்பவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார். எப்படியாவது ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமும் அவருக்கு இருக்கிறது.

அந்த வகையில் அவர் தற்போது நடித்து முடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தான் பெரிதும் நம்பி இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த படம் வெளிவந்த பிறகு நிச்சயம் தன்னுடைய நிலை மாறிவிடும் என்ற நம்பிக்கையில் ஜெயம் ரவி தற்போது இருக்கிறார். இதனிடையே அவர் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று அவர் அண்ணனிடம் பேசி வருகிறார்.

ஜெயம் ரவி மற்றும் ராஜா கூட்டணியில் வெளிவந்த அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் மார்க்கெட்டும் ஏறியது. அதனால் தான் அவர் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

இது குறித்த பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் ஜெயம் ரவி இப்போது நடித்துக் கொண்டிருக்கும் இறைவன் திரைப்படத்தையும் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் அவருக்கு ஒரு நல்ல பிரேக் தரும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி ஒரு மாஸ் இயக்குனருடன் கூட்டணி அமைக்க இருக்கிறார். அவர் வேறுயாரும் அல்ல அதிரடி இயக்குனரான ஹரி தான். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படம் குடும்ப ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

அதைத்தொடர்ந்து ஹரி, ஜெயம் ரவியுடன் இணைந்து ஒரு படம் பண்ணப் போகிறார் என்ற ஒரு பேச்சு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரும் இணையும் பட்சத்தில் அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

Trending News