நாகேஷிடம் அசிஸ்டெண்ட்டாக இருந்து அவருடைய பங்களாவையே விலைக்கு வாங்கிய ஒரே இயக்குனர் இவர்தான்.. கெத்து!

பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் உதவி பணியாளர்களாக இருக்கும் பலரும் பின்னாளில் அதே முன்னணி நடிகர்களின் சொத்துக்களை வாங்குவது சினிமாவின் எழுதப்படாத விதி தான்.

அப்படிப்பட்ட சம்பவம் தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான் நாகேஷ் அவர்களின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் வலம் வந்த காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் நாகேஷ்.

சிவாஜி மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் செல்லப் பிள்ளையாகவும் வலம் வந்தார். அந்த காலகட்டத்தில் அதிக படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகர் இவர்தான். மேலும் ஒரு படத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார்.

ஆனால் எப்பேர்பட்ட முன்னணி நடிகராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவர்களது மார்க்கெட் சரிய தொடங்கும் தானே. அப்படி நாகேஷின் சினிமா மார்க்கெட் சரிய தொடங்கிய போது தன்னுடைய சொத்துக்களை விற்கும் நிலைமைக்கு வந்து விட்டாராம்.

அந்தவகையில் நாகேஷின் விலையுயர்ந்த பங்களாவை கமர்ஷியல் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் விலைக்கு வாங்கி விட்டாராம். இவர் ஆரம்ப காலகட்டங்களில் நாகேஷின் உதவியாளராக இருந்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

பின்னாளில் நாகேஷுக்கு மார்க்கெட் சரிந்த போது கேஎஸ் ரவிக்குமார் தமிழ் சினிமாவின் உச்ச இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது நாகேஷின் நிலைமையைப் பார்த்து வலியப்போய் நன்றி மறவாமல் அவருக்கு சில பட வாய்ப்புகளையும் கொடுத்தாராம் கேஎஸ் ரவிக்குமார்.

ks-ravikumar-cinemapettai
ks-ravikumar-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்