ஈஷா மையத்தில் விடிய விடிய நடந்த சிவராத்திரி கொண்டாட்டம்.. பரவச நிலையில் ஜக்கி, கண்ணீர் விட்டு அழுத சந்தானம்

Maha Shivratri: நேற்று மகா சிவராத்திரி நாளை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் சிறப்பு கொண்டாட்டம் நடைபெற்றது. வருடம் தோறும் இதை பெரும் விமரிசையாக நடத்தி வரும் ஜக்கி இந்த முறையும் பிரம்மாண்டமாக விழாவை நடத்தியுள்ளார்.

அதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். எப்போதுமே ஈஷா யோகா மையத்தில் பக்தர்களின் வரவு அதிகப்படியாக இருக்கும். மேலும் சமந்தா, காஜல் உள்ளிட்ட பல நடிகைகளும் அங்கு ஜக்கியுடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோக்களும் வெளிவந்து பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

பிரதமர் கூட ஒரு முறை இந்த விழாவில் கலந்து கொண்டதையும் நாம் பார்த்திருக்கிறோம். இப்படி விஐபிகள் வந்து செல்லும் இடமாக தான் ஈஷா யோகா மையம் இருக்கிறது. அதன்படி இந்த வருடம் தமன்னா, பூஜா ஹெக்டே, சந்தானம் உள்ளிட்ட பலர் ஈஷா மையத்துக்கு வருகை தந்திருக்கின்றனர்.

Also read: விஜய் மகனை தூண்டி விட்ட ஷாலினி.. அரசியலில் தளபதிக்கு ஏற்படப்போகும் அவமானம்!

அதில் சங்கர் மகாதேவன் சிவன் பாடலை பாடும் போது ஒட்டு மொத்த பக்தர்களும் பரவச நிலையில் உற்சாகத்துடன் நடனம் ஆடினார்கள். அது மட்டும் இன்றி ஜக்கியும் அருள் வந்தது போல் பக்தி பரவசத்துடன் துள்ளி குதித்து நடனம் ஆடினார். இதை பார்த்த பக்தர்கள் சிவனே வந்து நடனம் ஆடியதாக கையைக் கூப்பி கண்ணீர் மல்க உருகிப் போய் நின்றனர்.

கண்ணீர் விட்டு அழுத சந்தானம்

santhanam-actor
santhanam-actor

இதில் தமன்னா மற்றும் பூஜா இருவரும் கூட வைப் செய்தது குறிப்பிடத்தக்கது. இதில் பலரையும் ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம் சந்தானம் கண்ணீர் விட்டு கதறி பிரார்த்தனை செய்தது தான். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது.

வருடம் தோறும் சிவராத்திரிக்கு இதுபோல் சிறப்பு விழாவை ஏற்பாடு செய்வதற்கு எதிர்ப்புகளும் ஆதரவும் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் பக்தர்கள் இந்த நாளில் அங்கு குவிந்து விடுகின்றனர். ஆக மொத்தம் விடிய விடிய ஈஷா மையத்தில் நடந்த மகராத்திரி கொண்டாட்டம் இன்றைய பரபரப்பு செய்தியாக மாறி உள்ளது.

Also read: காவாலையா குத்தாட்டத்துக்கு வாங்கியதெல்லாம் ஒண்ணுமே இல்ல.. ஒரு நாளைக்கு ஒரு கோடி வாங்கும் தமன்னா

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்